தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.
தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்கட்சிகள் மற்ற கட்சிகள் என அனைவரும் ஒருமித்த குரலோடு இந்தப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அரசியல்வாதியும் முனைப்பு காட்ட வில்லை என்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஓட்டு போட்ட மக்கள் படும் இன்னல்களுக்கு குரல் கொடுக்காத இவர்களை நம்பி அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
எனவே அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து இந்த சாலை பணியை விரைவாக முடித்து தர வேண்டும் என்று அரசு இயந்திரத்தை முடித்துவிட்டு பணியை பொற்கால அடிப்படியில் செய்து முடிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்க ஆவன செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Comments
Post a Comment