எதிர் கருத்துக்களை சந்திக்க துணிவில்லாத திருமுருகன் காந்தி
சென்னையில் பிரஸ் கிளப்பில் திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எல்லா பத்திரிகையாளர்களும் வந்திருந்த போது ஜனனம் தொலைக்காட்சியின் பத்திக்கையாளர்களை மட்டும் மைக்கை எடுக்க சொல்லி உங்கள் ஊடகம் மட்டும் தேவையில்லை என்று சொல்லி அவர் பேசிய காணொளி வைரலாகி வரும் சூழ்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கங்களுமே அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பொய்களையே பேசி வரும் திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே எதிர் கருத்துக்களை சந்திக்க துணிவில்லாத ஒரு பேடி என்பதை நிரூபித்துள்ளதாக எதிர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசின் நியாய விலை கடைகள் மூடப்படும் என்பது போன்ற பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு அளித்தவர் தான் இந்த திருமுருகன் காந்தி. தற்போது ஜனனம் ஊடகத்தை ஆர் எஸ் எஸ் ஊடகம் என்றும் அது இருக்கக் கூடாது என்றும் அவர் கூறிவரும் சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இதே போல் ஒரு திரு எச் ராஜா அவர்களோ, அண்ணாமலை அவர்களோ அல்லது வேறு எந்த வலதுசார...