மினி பேருந்து ஆட்டோ விபத்து இருவர் பலி
மினி பேருந்தும் லோடுஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி! 5 படுகாயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கம்பிளி கிராமம் விந்தன் கோட்டை விளக்கிற்கு கீழ்ப்புறம் சுரண்டை சாலையில் கார், லோடு ஆட்டோ, மினி பேருந்து, விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர், விவசாயி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் இலத்தூர் அருகே சீவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாதவன் வயது (39) இவர் லோடு ஆட்டோ ஓட்டுகிறார் மாலை 6 மணி அளவில் இலத்தூர் சங்கர் தெருவை சேர்ந்த தங்கையா தேவர் மகன் அண்ணாமலை வயது ( 65 ) ஆகியோர் வயலில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் சுரண்டை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கம்பிளிக்கு கிழக்கே விந்தக்கோட்டை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அதே வழியாக சுரண்டையை நோக்கி சென்ற கார் லோடு ஆட்டோவின் மீது பின்னால் மோதியது இதில் ஆட்டோ நிலை தடுமாறி சென்றது அப்பொழுது சுரண்டையில் இருந...