பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்

 *புளியங்குடியில் காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்வததாகக்கூறி காதல்மனைவி குழந்தையுடன் காதல்கணவரின் வீட்டின் முன்பு தர்ணா- கணவரின் பெற்றோர்கள் பெண்ணை தாக்கி விரட்டும் வீடியோ வைரல்*


தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் மஞ்சுப்ரியா (எ)தன்ஷிலா (25) இவர் இதே புளியங்குடி பகுதியை சேர்ந்த இளைஞர் 

முகமது இத்ரிஸ்(27) என்பவரும் 

கடந்து ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் மஞ்சு ப்ரியா (எ) தன்ஷிலா சென்னையில் உள்ள கல்லூரிக்கு படிக்க சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து காதலன் முகமது இத்ரீஸை தனது பெற்றோர்கள் வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள  நிலையில் மூன்று மாதங்கள் வெளிநாட்டில் இருந்த இவர் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சென்னையில் படிக்கும் தனது காதலியை சந்திக்கச் சென்ற நிலையில் பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகுவதற்கு முன்பே பெண்குழந்தை பிறந்துள்ளது.


இந்த விபரம்  மஞ்சுப்ரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து புளியங்குடி  ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.


அதன் பின்னர் குழந்தையுடன் மூன்று பெயரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முகமது இத்ரிஸ் என்பவர் பெற்றோரை பார்க்க ஊருக்கு செல்வதாக காதல் மனைவியிடம் கூறிவிட்டு புளியங்குடி வந்த இவர். மனைவியிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். 

இதனை அடுத்த காதல் மனைவி மஞ்சுப்ரியா(எ) தன்ஷிலா சென்னையில் இருந்து குழந்தையுடன் புளியங்குடி சென்றுள்ளார். அப்போது தான் தனது காதல் கணவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க காதலனின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வருவதும் தெரியவந்துள்ளதாம்.


இதனை அடுத்து காதல் மனைவி மஞ்சுப்ரியா(எ) தன்ஷிலா தனது குழந்தையுடன் கணவரின் வீட்டிற்கு  சென்றுள்ளார். அப்போது கணவரின் பெற்றோர்கள் கைக்குழந்தை சென்ற மஞ்சுப்ரியா (எ)தன்ஷிலா வீட்டில் விடாமல் தடுத்துள்ளனர். 


இதனை அடுத்து தனது காதல் கணவரை காணவேண்டும் எனக்கூறி வீட்டு வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த காதல் கணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மஞ்சு ப்ரியா(எ)தன்ஷிலாவை வெளியே போகும்படி பேசி மிரட்டல் விடுத்ததோடு அவரை தாக்கிய கூறப்படும் நிலையில் கால்களை பிடித்து வெளியே இழுத்து போட்டு வீட்டில் கேட் கதவை பூட்ட முயன்றுள்ளர். 


இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த புளியங்குடி போலீசார் காயம்பட்ட பெண்ணை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் குழந்தையுடன் காதல் கணவரை பார்க்க சென்ற மனைவியை காதல் கணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தாக்கி காலைப்பிடித்து இழுத்து வெளியே வெளியே தள்ள முயற்சிக்கும் வீடியோவானது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

ஓட்டு போட வந்தவர் மாயம்

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக