திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் கூட்டணியோடு ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற திராவிட கட்சிகளில் இருந்து பல முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வருவதோடு பலரும் ஏற்கனவே திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் புதிய ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து பெரும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ள நிலையில் ஏற்கனவே 50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து பல தலைவர்களும் தேவைக்காக இணைந்து வருவது மக்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக அரசியலில் வாடிக்கையாக நடப்பது என்னவென்றால் திராவிட கட்சிகளில் உள்ள சில புல்லுருவிகள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எந்த கட்சிக்கு வேண்டும் எனும் தாவி தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதோடு அக்கச்சியின் முக்கிய பதவிகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் திராவிட சித்தாந்தம் பகுத்தறிவு என்ற பெயரில் தொடர்ந்து இந்து விரோத சித்தாந்தத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்வார்கள்.
எனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் இதுபோன்ற சுயநலமிக்க அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டாலும் கூட சில வருடங்களுக்காகவாது அவர்களுக்கு எந்தவித பதவிகளும் கொடுக்காமல் அவர்கள் உண்மையிலேயே அரசியலில் மக்கள் சேவை செய்ய தான் வந்துள்ளனரா? அல்லது பதவி மற்றும் அதிகாரம் மற்றும் பண பலத்தை பெருக்கிக் கொள்ள வந்துள்ளனார்கா என்பது பற்றி தீர ஆராய்ந்து அதன் பின் அவர்களுக்கு பதவி கொடுப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இல்லையெனில் விரைவில் தமிழக வெற்றி கழகமும் திராவிடம் 2.0 ஆக மாறி திமுகவின் ஜெராக்ஸ் காப்பியாகவே இருக்க வாய்ப்புள்ளது.

Comments
Post a Comment