கேரளா சிறுமியின் சாதனை

 




அம்மாவை தள்ளி வீழ்த்தி சங்கிலியை பறித்து ஓடிய திருடனை

துரத்திப் பிடித்து தரையில் வீழ்த்தியது

ஒரு 14 வயது சிறுமி 👏🥰


ட்யூஷன் முடிந்து இரவு வழக்கம்போல் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம்.

எதிரில் வந்த ஒருவன் திடீரென அம்மாவை தள்ளி வீழ்த்தி சங்கிலியை பறித்து ஓடினான்.


அம்மா தரையில் விழுந்ததை பார்த்த அந்தச் சிறுமிக்கு பயம் இல்லை…

கோபம்தான்.


எதையும் யோசிக்கவில்லை.

திருடனைத் தொடர்ந்து அவளும் ஓடினாள்.


பரபரப்பான சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம்.

இறுதியில் அவளே அவனைப் பிடித்தாள்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக கற்றுக்கொண்ட கராத்தே அவளுக்கு பலமாக அமைந்தது.

ஊரார் பார்த்துக் கொண்டிருக்க, நடுவழியிலேயே திருடனுக்கு நல்ல பாடம் கிடைத்தது.


ஆலப்புழா முட்டார் பகுதியைச் சேர்ந்த திவ்யா,

டெல்லி விகாஸ்புரி கேரளா பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி.


“சங்கிலி போனதைவிட,

அம்மாவை தள்ளிவிட்டதைப் பார்த்தபோது

என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை”

என்று அவள் கூறினாள்.

பெண்களுக்கு சுய பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை

இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.


திவ்யாவுக்கு சல்யூட் ✊

இந்த அம்மாவுக்கும் மகளுக்கும் இன்றைய லைக் ❤️👏

#Keeravani 

#newyearevent

#texas

#monopolygoca

#northcarolina

#trader

#tv

#Tennessee

#prizemoney

#localcommunity

#socialmedia

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்