Posts

Showing posts with the label #Breakingnews

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Image
 உளுந்துார்பேட்டை அருகே ஓம்சக்தி பக்தர்கள் சென்ற தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஓம்சக்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சொகுசு பஸ்சில் மேல்மருவத்துாருக்கு சென்றனர். நேற்று இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காலை 8:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து, அனைவரும் மாற்று பஸ் மூலம் லால்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். @topfans #idumban #fblifestyles #PothigaiTimes #PothigaiTimesnews 

பங்களாதேஷ் இந்திய சொத்துக்கள் குறித்து ராணுவ தளபதி விளக்கம்

Image
  🇮🇳 இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானுடன் தொலைபேசியில் உரையாடினார். 👉 வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய சொத்துக்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் வங்கதேசம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் வங்கதேச ஜெனரல் ஜெனரல் திவேதிக்கு அவர்களுக்கு  உறுதியளித்தார்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Image
     மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 19 12 2025 அன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்று கொண்டிருந்த வேன் பணக்குடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

ஆம்னி பேருந்து மேம்பாலத்தின் மீது மோதி விபத்து

Image
   பேருந்து மேம்பாலத்தின் மோதி விபத்து   சென்னை நோக்கி  அதி வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சங்கராபரணி ஆறு  மேம்பாலத்தின் தடுப்புசுவர் மீது மோதி விபத்து உள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் உட்பட 35க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்😪

இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

Image
 நமது இந்திய நாட்டில் நியூ ஆப்ஸ் டைம்ஸ்  பத்திரிகை எடுத்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் சீரழிந்த மாநிலத்தில் நமது தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.  இந்தியாவின் நியூ ஹேர் டைம்ஸ் பத்திரிகை எடுத்த ஆய்வில் மது, போதைப் பொருள் பழக்கம், பொறுப்பற்ற நடைமுறைகள், சட்ட விதிமுறை மீறல்களில் முதலிடம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் ரவுடிசம் இவற்றின் அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழக இளைஞர்கள் தான் அதிகம் சீரழிந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பெருமை அனைத்தும் நமது திராவிட மாடல் அரசையும், காவல்துறையின் அமைச்சராக இருக்கும் முதலமைச்சரையும் சாரும்.  இனியும் தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாவது உறுதி.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தயாராகும் வடைமாலைகள்

Image
 நாளை(19/12/2025) அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தயாராகும் வடைகள். இந்த வடைகள் நாளை காலை அனுமன் சுவாமிக்கு வடைமாலையாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இன்றைய(17/12/2026) செய்தி துணுக்குகள் பாகம் 2

Image
     பொதிகை டைம்ஸ் செய்தியாளர் சிவா என்ற கருப்பசாமி 

இந்தியா 315 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Image
  19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் under 19 ஆசிய கிரிக்கெட் போட்டியில் மலேசியா அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  பொதிகை டைம்ஸ் செய்தியாளர் சிவா என்ற கருப்புசாமி 

ஊழலில் பட்டம் பெற்றுள்ளது தமிழ்நாடு. மார்க்கண்டேய கட்ஜூ கருத்து

Image
  இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது.முன்னாள் நீதிபதி கருத்து.  முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "இந்தியாவில் ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.ஊழல் இல்லாமல் எதுவும் நகராத மாநிலம் என்ற பெருமையைப் பெறலாம், இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு, முதலமைச்சர் காமராஜரின் கீழ் இருந்த தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலம் என்று வர்ணித்த காலத்திலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது.  தமிழ்நாட்டில் ஆளும் நவ-பாசிச திமுக ஆட்சி, அதன் ஊழல் மற்றும் பிற தவறான செயல்கள் குறித்த எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள விரும்பாதது போல் தெரிகிறது, எந்தவொரு எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக, மாநிலத்தில் ஒரு பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.  இதன் விளைவாக, பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்ள அஞ்சி, எந்த ஊடகவியலாளரும் அதற்கு எதிராகப் பேசத் துணிவதில்லை. சவுக்கு சங்கர் தமிழ்நாட்டில் பிரபலமான, துணிச்சலான மற்றும் நேர்மையான யூட...

மத்திய அரசு கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

Image
  திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது.  தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொப்பரைத் தேங்காய் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ 12027/- என்றும் பந்து கொப்பரைக்கு குயின்ஷாளுக்கு ரூ  12500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் களின் விலை உயர வாய்ப்பு

Image
  இந்தியாவில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் ஆனால் சிகரெட் போன்றவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்தியாவில் புகையிலை பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் புகையிலைப் பொருட்களின் வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து இந்திய அரசு கடந்த சில நாட்களாகவே பரிசீலித்து வந்தது. தற்போது புகையிலைப் பொருட்களுக்கான வரி விகிதத்தை உயர்த்தி இன்று அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகம் உள்ளது.  இது இந்தியாவில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இன்றைய முக்கிய செய்தி துணுக்குகள்

Image