Posts

Showing posts from February, 2026

இன்றைய28/02/2026 குற்றால நிலவரம்

Image
ஐந்தருவி மெயின் அருவி  

கடமையுணர்வின் ஒப்பற்ற ஒரு கதை இது

Image
மரணத்தின் வேளையிலும்  அந்தக் கைகள் ஸ்டியரிங்கில் நடுங்கவில்லை;😥🫂🚍  நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காத்து பிரதீப் திரும்பினார்! 💔 கடமையுணர்வின் ஒப்பற்ற ஒரு கதை இது. மாவேலிக்கரை டிப்போவிலுள்ள KSRTC (கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம்) ஓட்டுநர் பிரதீப் குமார் இன்று உலகை விடைபெற்றது ஒரு சாதாரண டிரைவராக அல்ல; பலரின் உயிரைக் காத்த ரட்சகராகத்தான்.😥🚍❤️ பஸ் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட கடுமையான இதயக் கோளாறின் வேதனையிலும், பிரதீப் முதலில் நினைத்தது தன் பின்னால் அமர்ந்திருந்த பயணிகளைப் பற்றிதான்.❤️😥🙏 கண்களில் இருள் சூழ்ந்தபோதும், மயக்கம் வந்து கொண்டிருந்தபோதும் அவர் ஸ்டியரிங்கை விடவில்லை. கட்டுப்பாட்டை இழந்தால் அந்தப் பெரிய வாகனம் பெரும் விபத்துக்குச் செல்லும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இறுதி மூச்சையும் திரட்டிக் கொண்டு, மீதமிருந்த சக்தியையெல்லாம் ஒன்றுகூட்டி, அருகிலிருந்த ஒரு கடையின் சுவரில் பஸ்ஸை மெதுவாக மோதி நிறுத்தினார்.😥❤️🚍 பஸ் பாதுகாப்பாக நின்றது என்று உறுதிப்படுத்திய அந்த நொடியில், அந்தத் துணிச்சலான சாரதி மரணத்திற்கு தலைவணங்கினார்.😥😥 தனது உயிர் பிரியும்...

இன்றைய27/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

சத்திரக்குடி தனியார் பள்ளி பேருந்து விபத்து: 30 குழந்தைகள் காயம்

Image
  📢 சத்திரக்குடி தனியார் பள்ளி பேருந்து விபத்து: 30 குழந்தைகள் காயம் : ​ இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளான செய்தி நெஞ்சை பதறவைக்கிறது  💔 சமீப காலங்களில் இந்தப் பகுதியில் நடக்கும் (தணியார் பள்ளி வாகனம்) இரண்டாவது விபத்து இது என்பதுதான் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.  ​நமது குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெறும் 'விதி' என்று கடந்து போகக்கூடிய ஒன்றல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு! 🤝 இன்று நடந்த விபத்து பின்னால் வந்த லாரியின் கவணகுறைவால் நடந்ததாக அறியமுடிகிறது..தனக்கு முன்னாள் செல்வது குழந்தைகள் செல்லும் பள்ளிவாகனம் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் அலட்சியமாக இயக்கியதை CCTV காட்சிகள் மூலம் அறியமுடிகிறது  

காசா பெயரில் போலி நிதி வசூல் பித்தலாட்டங்கள்

Image
  இவன் சிரியாவைச் சேர்ந்த அலி மேகத் அல்சாஹர். சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து, காசா குடிமகன் என்று பொய்யாகக் கூறி பல நகரங்களுக்குச் சென்றான். "சுதந்திர பாலஸ்தீனம்" என்ற பெயரில் குஜராத்தில் உள்ள பல மசூதிகளில் இருந்து நன்கொடைகளை வசூலித்தான். அனைத்து நிதிகளையும் தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு திருப்பிவிட்டான். சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 2025 இல்,  அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டான். காசாவில் நிவாரணப் பணி என்ற பெயரில் நன்கொடைகளை வசூலிப்பதன் மூலம் தன்னைப் போன்ற பலர் இதே மோசடியை நடத்தி வருவதாக அவர் வெளிப்படுத்தினார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அகமது ஓஹத், ஜகாரியா ஹைதம் மற்றும் யூசுப் காலித் ஆகிய 3 சிரியர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காசா நிவாரணம் என்ற பெயரில் நிதி சேகரித்து, தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு நிதியளிக்க தங்கள் தனிப்பட்ட கணக்குகளுக்கு பணத்தை மாற்றினர். காசா அல்லது சுதந்திர பாலஸ்தீனம் என்ற பெயரில் நன்கொடைகள் கேட்பவர்களிடம் ஜாக்கிரதை.

7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏

Image
  7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏 கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்🙏 கோவையைச் சேர்ந்த திரு. சந்தோஷ் (78வது வார்டு கவுன்சிலர்) & திருமதி:சுகன்யா  தம்பதியின் மகளான வெண்பா, கடந்த 23ம்தேதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். 😭😭 நெஞ்சம் தாங்கா துயரத்திலும், மகளின் உடல்உறுப்புகளை (சிறுநீரகம், கல்லீரல், தோல், கண்கள்) தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், 7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். 🙏🙏😭♥️ சிறுமியின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.🙏🙏🙏 "எல்லாம்வல்ல இறைவன் அக்குடும்பத்தினருக்கு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையையும், மன அமைதியையும் அருள்புரிவானாக. அவர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். 🙏✨" அவர்களுக்காக பிராத்திப்போம்🙏🙏

பிரதமர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு

Image
  பிரதமர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு: மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற் கொண்டனர்.  பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தருகிறார்.  மதுரை வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  இந்த நிலையில் பாரத பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அவரது சிறப்பு பாதுகாப்பு படையினர் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மதுரை விமான நிலையம், விமான நிலையம் அருகே அரசு நிகழ்ச்சி நடைபெறும் பகுதி  அதனைத் தொடர்ந்து , பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.  பிரதமர் வந்து செல்லும் பகுதியில், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பகுதிகளில் பாதுகாப்ப...

போதையின் உச்சத்தில் அடாவடி செய்த இளைஞர்

Image
  இருதினங்களுக்கு முன்பு கமுதி பேருந்து நிலையத்தின் முன்பாக காரை தாறுமாறாக ஓட்டி குடிகாரபய ஏற்புட்டுத்திய சம்பவம் அனைவரும் அறிந்திருப்போம்... அதன் விபரம்...😡 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாறு பகுதியில் மது அருந்திய பின்னர், போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய ஒரு நபர் ஏற்படுத்திய பெரும் கலவரம் மற்றும் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.😡 சிங்கபுளியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான நாகவடிவேல் என்பவர், கூட்டாளிகளுடன் டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். தலைக்கேறிய போதையில் தள்ளாடும் நிலையில் காரை எடுத்து ஓட்டி வந்துள்ளார்.😪😪 கமுதி நோக்கி வரும் குறுகிய சாலையில், பின்னால் வந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரின் பைக்கிற்கு வழிவிடாமல் நடுவழியில் காரை நிறுத்தியுள்ளார்.😡😡 இதனால் ஏற்பட்ட தகராறில், காரில் இருந்த கூட்டாளி ஒருவர் இறங்கி பைக் சாவியைப் பறித்து சண்டையிட்டுள்ளார். நாகவடிவேல் காரை ரிவர்ஸ் எடுத்து பைக் மீது மோ*தியதாகக் கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் பாண்டியன் காயமடைந்த நிலையில், நாகவடிவேல் தப்பி ஓடியுள்ளார்.😡😡😡 கமுதி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, போதையின் உச்சத்தி...

காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..!

Image
  காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..! ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் நேற்று நடந்த மோதலின் போது 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர். இவர்களில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகவும் தேடப்படும் ப*யங்கரவா*தியான சைபுல்லா என்பவனும் உ*யிரிழந்தான். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான சைஃபுல்லா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் தலைமறைவாக இருந்து, குறைந்தது 20 முறை பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான். ப*யங்கரவா(திகள் மலைப்பகுதியில் உள்ள ஒரு மண் வீட்டிற்குள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியது.  குறிப்பிட்ட அந்த இடத்தை நெருங்கிய போது பாதுகாப்புப் படையினர் மீது ப*யங்கரவா*திகள் தா*க்குதல் நடத்தியபோது இந்த மோதல் தொடங்கியது. பாதுகாப்புப் படையினர் உடனடியாக திறம்பட து*ப்பாக்கிச் சூடு நடத்தியதில் சைபுல்லா உட்பட 3 தீ*விரவா*திகள் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர்.  என்கவுன்டர் நடத்திய இடத்தில் இருந்து இரண்ட...

மருத்துவர்களின் அலட்சியம்

Image
  கேரளா மாநிலம் ஆலப்புழா பக்கத்துல இருந்த ஒருத்தருக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆலப்புழால இருந்தா அரசு கல்லூரி மருத்துவமனையில கருப்பைக் கட்டிய அகற்ற ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கு. அதுல இருந்து அந்த பொண்ணுக்கு தீவிரமான வயிற்று வலியும் சிறுநீரில் ரத்த கசிவும் ஏற்பட்டிருக்கு. சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனைகளை அந்த பொண்ணுடைய வயித்துல கத்தரிக்கோல் இருக்கிறதை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு. இந்த விவகாரம் தெரிந்து அரசு சார்பில் இருந்து அந்த பெண்ணுடைய வயிற்றில் இருக்கக்கூடிய கத்திரிக்கோலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற கொச்சியில் இருக்கக்கூடிய ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. இந்த மாதிரியான மருத்துவப் பிழை கேரளால தொடர்ந்து நடந்துட்டு வருது.

இன்றைய24/02/25 செய்தி தொகுப்புகள்

Image
 

டூவீலர் சென்டர்மீடியனில் மோதி மாணவன் பலி😥😥

Image
  டூவீலர் சென்டர்மீடியனில் மோதி மாணவன் பலி😥😥 மார்த்தாண்டம் அருகே +1 படிக்கும் மாணவர் அஜீஷ் (16) தனது நண்பரான 16 வயது சிறுவனுடன் நேற்று நட்டாலம் பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார்.  அப்போது சாலையில் சென்ற போது  கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.😥😥 அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அஜீஷ் உயி*ரிழ*ந்தார்😭😭. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு. #kanyakumari #nagercoil #marthandam #tamilnadu #thuckalay

கேரளாவில் அதிகாரிகளிடம் அத்துமீறிய தந்தை கைது

Image
  கேரளாவில் லைசன்ஸ் இல்லாமல் மகள் ஓட்டிய வாகனம்… MVD பறிமுதல் செய்த ஸ்கூட்டரை விடுவிக்க முயன்ற தந்தையின் ‘அதிசாகசம்’; இறுதியில் போலீஸ் நடவடிக்கை, தந்தை ரிமாண்டில்!😡😰 திருவல்லாவில் இன்று நடந்தது சினிமாவையே மிஞ்சும் நாடக சம்பவம்! Kerala Motor Vehicles Department (MVD) அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாரப்பூர்வ பணியைத் தடுக்க முயன்ற ஒருவரை போலீஸ் கைது செய்தது.🤝 திருவல்லா பொடியாடி பகுதியில் MVD அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, 17 வயது சிறுமி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் அவர்களின் கவனத்திற்கு வந்தது. உரிய ஓட்டுநர் உரிமம் இன்றி, குறைந்த வயதில் வாகனம் ஓட்டியது உறுதியானதால், அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.🤝 இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிறுமியின் தந்தை அஜேஷ், வாகனத்தை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை தீவிரமடைந்தபோது, அவர் முதலில் அதிகாரியின் கையிலிருந்த ஸ்கூட்டர் சாவியை பலவந்தமாகப் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதில் வெற்றி பெறாததால் ஆவேசமடைந்தார்.😡 “என் வண்டியை விடவில்லை என்றால்,...

நூதன முறையில் நகை திருட்டு.

Image
  ஆந்திராவைச் சேர்ந்த 52 வயசான சாய் ஜெகதீஷ் திருவண்ணாமலையில இருக்கிற ரகுராஜ்  கிட்ட தன்னை ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக்கிட்டு அவரோட வீட்டுல வாடகைக்கு இருந்துருக்காரு. வீடு குடிவந்து கொஞ்ச நாள்ல சாய் ஜெகதீஷ் ஹவுஸ் ஓனர் உடைய பசங்கள மாடலிங்கில் சேர்த்து விடுறேன்னு சொல்லி சென்னை கூட்டிட்டு போயிருக்காரு. ராயப்பேட்டையில் இருக்கிற ஒரு மால்ல போட்டோ ஷூட் எடுப்பதற்காக அந்த பசங்களோட நகைய கலட்ட சொல்லி வாங்கிட்டு அந்த நகையோட தப்பிச்சு ஓடி இருக்காரு. இது குறித்து அளிக்கப்பட்ட புகார வச்சு காவல்துறை நடவடிக்கை எடுத்து சாய் ஜெகதீஸ புடிச்சிருக்காங்க.அந்த விசாரணைகளை கிட்டத்தட்ட ஏழு வருஷத்துல 50 பவுனுக்கு மேல இது மாதிரி திருடியதாகவும் அந்த பணத்தை வைத்து காஷ்மீர் வரை பைக் ரைடு போனதாகவும் சொல்லி இருக்காரு.

ஆட்டோ டிரைவரின் சாமர்த்தியம்

Image
 கோட்டயம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறிய அந்த பெண்ணின் நடத்தை ஆரம்பத்திலிருந்தே டிரைவர் மனோஜ் குமாருக்கு சந்தேகமாகவே தோன்றியது. கையில் இருந்த பையில் இருந்து தொடர்ந்து பணப்பைகளை எடுத்துப் பார்த்ததும், சுற்றியிருந்தவர்களை கவனமாக நோட்டமிட்டதும், ரியர்-வியூ கண்ணாடி வழியாக மனோஜ் கவனித்துக் கொண்டிருந்தார். மனோஜின் “டிரைவர் புத்தி” வீணாகவில்லை. அந்த பெண் ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன், அவர் வண்டியின் பின்பகுதியை சோதனை செய்தார். அதிர்ச்சியூட்டும் காட்சி! சீட்டின் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்கள் பணப்பைகள் அங்கே கிடைத்தன. ஒரு நொடியும் வீணாக்காமல் மனோஜ் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில், 10,000 ரூபாய் காணாமல் போனதாக ஒரு பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில், பிடிபட்ட இளம் பெண் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது. ஒரு நாளில் எத்தனை பேரின் பணப்பைகள் இவரால் பறிக்கப்பட்டிருக்கலாம்! நம் சமூகத்தின் பாதுகாப்புக்காக ஒரு கணமும் தய...

இன்றைய22/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

தமிழகத்தின் தென் பகுதியில் அமைவதற்கும் புதிய நான்கு வழி சாலை

Image
  தென் தமிழ்நாட்டையே.. அடியோடு மாற்ற போகும் மிக முக்கிய அறிவிப்பு.. நெல்லை, தூத்துக்குடிக்கு ஜாக்பாட் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை 16, 8 மற்றும் 4 வழிச் சாலைகளாக மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கியமான புதிய சாலைத் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NH-32 தேசிய நெடுஞ்சாலையின் கீழ், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய நான்கு வழிச்சாலைக்கான உத்தேச வழித்தட வரைபடத்தை அரசு வெளியிட்டுள்ளது. தென் தமிழகத்தின் போக்குவரத்து புரட்சி சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான சுமார் 690 கி.மீ. தூரத்திற்கான NH-32 நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சாலை தற்போது தூத்துக்குடியில் இருந்து தெற்கே நீட்டிக்கப்படுகிறது. ஆன்மீக நகரமான திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரியைச் சென்றடையும் இந்தச் சாலை, 'தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (TTK) சாலைத் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய நான்கு வழிச்சாலை சுமார...

பாலியல் தொந்தரவு ! தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் செந்தில் குமார் இடைநீக்கம்

Image
  பாலியல் தொந்தரவு ! தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் செந்தில் குமார் இடைநீக்கம் பயிற்சி பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை IV படை கமாண்டன்ட் செந்தில்குமாரை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு

கும்பகோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். வாலிபர் கைது.

Image
  "Class room-ஐ விட்டு வெளியே வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"- தனது நண்பரை நம்பி கல்லூரியை விட்டு வெளியேறிய மாணவி; பேசிக்கொண்டிருந்த போதே தாலி கட்ட முயற்சி; அடுத்து நடந்த பகீர் சம்பவம்..! வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை நைசாக அழைத்துச் சென்று, மானவர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.  கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 21). இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். பாலகிருஷ்ணனும், அந்த கல்லூரி மாணவையும் பள்ளியில் ஒன்றாக படித்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, மாணவிக்கு திருமணம் செய்து வைக்க அந்த மாணவியின் பெற்றோர் முடிவு ...

பிச்சைக்காரன் ஆக வாழ்வது லட்சாதிபதியாக இறந்த முதியவர்

Image
  கோவில் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்.. இறந்த பிறகு பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! Ambala நகரில் மூன்று சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து வந்த லெக்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி முதியவரின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அனுமன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் சாலையில் விழுந்த நிலையில், 'வந்தே மாதரம்' குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை உரிமை கோர யாரும் வராததால், அந்த தன்னார்வக் குழுவினரே அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர். இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு போலீசார் அவர் பயன்படுத்திய பெட்டியைச் சோதனையிட்டபோது, அவர் ஒரு லட்சாதிபதி என்பது தெரியவந்தது. அந்தப் பெட்டியில் சுமார் ₹66,000 ரொக்கப்பணம் மற்றும் இரண்டு வங்கி பாஸ்புக்குகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்குகளில் ₹3 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருப்பு இருந்தது விசாரணையில்...

கேரளாவில் மீண்டும் ஒரு துயரச்சம்பவம்

Image
  கேரளாவில் பதனம்திட்டா மாவட்டம் கடம்பனாடு பகுதியில், 35 வயதான ரேணு அனில் என்ற பெண், தனது கணவரின் வீட்டில் பிப்ரவரி 14, 2026 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ரிசெப்ஷனிஸ்டாக பணியாற்றி வந்தார். இந்த சம்பவத்தில், #யூத்_காங்கிரஸ் மாநில செயலாளரான சுஹைல் அன்சாரி (33 வயது, புனலூர்), அதே பள்ளியில் பிஆர்ஓவாக பணியாற்றியவன், தற்கொலைக்கு தூண்டியதற்காக பிப்ரவரி 18, 2026 அன்று கைது செய்யப்பட்டான்.  ரேணு அனிலின் தற்கொலை குறிப்பு, டைரி குறிப்புகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களில், சுஹைல் அவரை தொடர்ந்து செய்திகள் அனுப்பி மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், உடல் உறவுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தனிப்பட்ட புகைப்படங்கள் கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாலியல் தொல்லை மற்றும் விரக்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், உடலில் இருந்த காயங்கள் காரணமாக கணவர்மீது சந்தேகம் விழுந்தது, ஆனால் குறிப்புகள் மற்றும் உரையாடல்கள் சுஹைல் அன்சாரியை சுட்டிக்காட்டியதால், போலீசார் அவனை விசாரித்து கைது செய்தனர்.  மேலும் அவனுக்கு...

இன்றைய19/02/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

சட்டவிரோத புகையிலைபொருட்கள் விற்பனை. இருவர் கைது.

Image
  திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மால்வாய் கிராமத்தில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மணிவேல் மற்றும் அவருக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்த முருகேசன் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1981 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #Kallakkudi #PoliceStation #Tobacco #CotpaSeller #Arrest #1981kg #Seized #Helpline #TrichyDistrictPolice

ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ

Image
  ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ பெரிய விபத்து நிமிடங்களில் தவிர்க்கப்பட்டது! பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சாலையில் இயங்கிக்கொண்டிருந்தபோது, பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்து, சில நிமிடங்களுக்குள் தீ வேகமாக பரவியது. இந்த காட்சி பயணிகளையும், அங்கிருந்த பொதுமக்களையும் பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால், பெரிய விபத்தாக மாறியிருக்கக்கூடிய இந்த சம்பவம், பேருந்து ஊழியர்களின் சுறுசுறுப்பும், உள்ளூர் மக்களின் துரிதமான உதவியும் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டது.  புகை கண்ட உடனே பேருந்தை நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியதன் மூலம் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. அருகிலிருந்த மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் இணைந்தனர்.🙏 டீசல் குழாய் உடைந்து எரிபொருள் வெளியேறியதே தீப்பற்றுவதற்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாகவும், துரிதமான நடவடிக்கையாலும் யாருக்கும் காயம் ஏற்படாமல் அனைவரும் பாதுகாப்பாக மீண்டனர்.🙏💖 எச்சரிக்கையுடன் செயல்பட்ட பேருந்து ஊழியர...

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

Image
ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி  இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பயன்படுத்தி பயன்படுத்தி வருவது ஆன்லைன் வர்த்தகத்தை தான்.  இது வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை தொலைபேசி வாயிலாக கண்டறிந்து அவற்றின் தரம் குறித்த விபரங்களை ரிவ்யூகள் மூலமாக அறிந்து கொண்டு ஆர்டர் செய்ய வசதியாக உள்ளது. மேலும் பல பொருட்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைக்கிறது. பொருட்களை வாங்க பல கடைகளுக்கு அணிந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற காரணங்களால் மக்கள் அதிகம் பயன்படுத்துவது ஆன்லைன் வர்த்தக தளங்களாக மாறி வருகிறது.  இப்போது இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் பல பொருட்கள் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வருகிறது.  இதனால் நமது நாட்டில் நடக்கும் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி தொகை மற்றும் லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்கிறது.  இதனால் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு ந...