கேரளாவில் அதிகாரிகளிடம் அத்துமீறிய தந்தை கைது

 


கேரளாவில் லைசன்ஸ் இல்லாமல் மகள் ஓட்டிய வாகனம்… MVD பறிமுதல் செய்த ஸ்கூட்டரை விடுவிக்க முயன்ற தந்தையின் ‘அதிசாகசம்’; இறுதியில் போலீஸ் நடவடிக்கை, தந்தை ரிமாண்டில்!😡😰


திருவல்லாவில் இன்று நடந்தது சினிமாவையே மிஞ்சும் நாடக சம்பவம்! Kerala Motor Vehicles Department (MVD) அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாரப்பூர்வ பணியைத் தடுக்க முயன்ற ஒருவரை போலீஸ் கைது செய்தது.🤝


திருவல்லா பொடியாடி பகுதியில் MVD அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, 17 வயது சிறுமி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் அவர்களின் கவனத்திற்கு வந்தது. உரிய ஓட்டுநர் உரிமம் இன்றி, குறைந்த வயதில் வாகனம் ஓட்டியது உறுதியானதால், அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.🤝


இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிறுமியின் தந்தை அஜேஷ், வாகனத்தை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை தீவிரமடைந்தபோது, அவர் முதலில் அதிகாரியின் கையிலிருந்த ஸ்கூட்டர் சாவியை பலவந்தமாகப் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதில் வெற்றி பெறாததால் ஆவேசமடைந்தார்.😡


“என் வண்டியை விடவில்லை என்றால், MVD வண்டியும் போகாது!” என்று மிரட்டிய அவர், அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனத்தின் கதவைத் திறந்து, உள்ளிருந்த சாவியையும் எடுத்ததாக தகவல்.


இதனால் நிலைமை கட்டுக்குள் இல்லாததாக மாறியது. தகவல் கிடைத்ததும் Kerala Police உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அஜேஷை காவலில் எடுத்தது. அதிகாரப்பூர்வ பணியைத் தடுத்தது மற்றும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்துள்ளனர்.


குறிப்பு: குறைந்த வயதுடையவர்களின் கையில் வாகனம் கொடுக்கும் பெற்றோர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். சட்டத்தை மீறுவதன் விளைவு, இறுதியில் குடும்பத்திற்கே பாதிப்பாக முடியும்.🙏🙏🙏

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்