இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு
#இலஞ்சிபேரூராட்சி
#தென்காசிமாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனத்திற்கு
இலஞ்சியில் உள்ள இலஞ்சி பேரூராட்சிதுணைத் தலைவர் அலுவலகத்துக்கு எதிரிலேயே தினமும் சில விஷமிகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு பள்ளி வளாகமாக இருப்பதாலும் பல குழந்தைகள் அந்த வழியாக பள்ளிக்கு சென்று வருவதால் குழந்தைகளுக்கு பல நோய்த்தொற்றுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற குப்பைகளை கொட்டி இருப்பதை இளஞ்சி பேரூராட்சி நிர்வாகம் தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலஞ்சி துப்புரவு பணியாளர்கள் துணைத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு மட்டும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து உள்ளனர். எனினும் எதிரே உள்ள சுகாதார சீர்கேடு பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.
அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.



Comments
Post a Comment