அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

 


அரசியலைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார்.

 பல அரசியல்வாதிகளும் தாங்கள் இருந்த கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிகளுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான்.

 அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பொருத்தவரையில் அவர் எம்ஜிஆர் காலம் தொட்டு எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அதன்பின் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரின் விசுவாசத்தை பார்த்து தான் ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவரின் முதல்வராக்கி அரசையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் அதே விசுவாசத்தோடு கண்ணியத்தோடும் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.

 இதனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் சிறந்த விசுவாசி  என்பது அனைவருக்கும் தெரியும்.

 ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா கட்சியை கைப்பற்ற நினைத்தபோது அதற்கு எதிராக போர் போடி தூக்கிட்டு தர்மயுத்தம் செய்ததிலிருந்து ஆரம்பித்தது அவரது வீழ்ச்சி.



 ஓபிஎஸ்ஐ பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்பது அதிமுக கட்சியின் தொண்டர்களை கணித்தது. அதன் பின் அவர் எடப்பாடி உடன் சேர்ந்து அதிமுகவை வழி நடத்தி வந்தார். மீண்டும் அங்கு கருத்து வேறுபாடுகள் வர அங்கிருந்து அவர் வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது.

 அவர் சிறந்த நிர்வாகி இல்லை என்பதால் அவரால் கட்சியின் தொண்டர்களையும் கட்சியையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலவில்லை. இதனால் அவர் பிஜேபியின் உதவியை நாடினார். பிஜேபியும் அவரை திரும்பவும் அதிமுகவினை நினைக்க பல முயற்சிகள் செய்தது. ஆனால் எடப்பாடி அவர்கள் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் தனியாக விடப்பட்ட சூழ்நிலையில் அவரால் எங்கும் எனது அரசியல் இருப்பை உறுதி செய்ய முடியவில்லை.

 தற்போது சூழ்நிலையில் தனது சுயநலத்தைகாகவும் தனது அரசியல் இருப்பை உறுதி செய்யவும் பல அதிமுக நிர்வாகிகளும் முன்னால் செய்த அதே வேலை செய்து திமுகவில் தஞ்சம் அடைய காத்திருக்கிறார். தற்போதைய அவரது செயல்கள் அதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ்ஐ பொறுத்தவரை அவர் எங்கு சென்றாலும் அவரால் அரசியல் வெற்றி பெற அவ்வளவு எளிதாக முடியாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?