Posts

Showing posts from April, 2026

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்

Image
  தங்கப்பதக்கம் வாங்கிய பெண்ணுடன் நிச்சயதார்த்தம்..   கடைசியில் "அதை" சொன்ன மாப்பிள்ளை!  ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது படிப்பு, அந்தஸ்து என அனைத்தும் இருந்தும், ஒரு நபரின் பொறுப்பற்ற வார்த்தைகளால் ஒரு உயர்கல்வி மாணவி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரெஹானா.. நன்றாக படிக்கக்கூடியவர்.. முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, ஆளுநரின் கைகளாலேயே கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவருக்கும், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கைநிறையச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, தங்கப் பதக்கம் வென்ற மணமகள் என 12 வீட்டாருமே இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்தனர். நிச்சயதார்த்தமும் முடிந்தது.. இதனால் ஆரம்ப நாட்க...

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Image
 🚨 கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஸ்பாவில் வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ருமா சர்ணாபா (21), ரிமா ஷேக் (21) ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டபூர்வமான பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் போல போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தி வேலை பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல… ⚠️ இது நம் நாட்டின் பாதுகாப்புக்கும், சட்ட அமைப்புக்கும் நேரடியான சவால்! 👉 சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தால்: - வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் - உள்ளூர் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் - நாட்டின் பொருளாதாரத்திற்கே கேடு விளையும் அரசாங்கம் இதை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டு, சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 🇮🇳 நம் நாட்டின் பாதுகாப்பு முதன்மை! சட்டம் எல்லோருக்கும் ஒன்றே — அதை மீறினால் தண்டனை உறுதி. ✍️ #Sivakpm  #IllegalImmigration #Kerala #LawAndOrder #IndiaFirst

இந்தியாவில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை கொ*ல்ல பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு துரோகிகள் போலீசாரால் கைது..!

Image
 இந்தியாவில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை கொ*ல்ல பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு துரோகிகள் போலீசாரால் கைது..! உத்தர பிரதேசத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்காக வேலை செய்ததாக மீரட்டைச் சேர்ந்த துஷார் சௌஹான் என்ற ஹிஸ்புல்லா அலி கான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமீர் கான் என்ற இருவரை ப*யங்கரவா*த எதிர்ப்புப் படை (ATS) கைது செய்தது துஷார் மற்றும் சமீரும், பாகிஸ்தான் தீ*விரவா*த இயக்கத்தை சேர்ந்த ஷாசாத் பட்டி மற்றும் அபித் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இளைஞர்களைத் தங்கள் வலையமைப்பில் சேர்ப்பதற்காக ஈர்க்கும் பணி அந்த இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதற்காக அவர்களுக்குப் பெரும் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தங்களது பணிகள் முடிந்த பிறகு, ஒரு வளைகுடா நாடு வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் துஷார் மற்றும் சமீருக்கு உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​முக்கிய இந்துத் தலைவர்களை ஒழிக்கும் நோக்கத்துடனும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்க...

சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி

Image
 சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி!! பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார் 2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தான் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் வசித்த உமர், லஷ்கர் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் மகளை, சஜ்ஜாத் என்ற போலி அடையாளத்துடன் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமண ஆவணங்களை வைத்து போலியாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். ஸ்ரீநகர் போலீஸார் நடத்திய விசாரணை தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிரப்பட்டுள்ளன. இது குற...

தென்காசியில் காணாமல் போன நிட்சேப நதி

Image
  தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள்...

இரயிலில் கல் எரிந்து ஒருவர் காயம். ஒருவர் கைது

Image
 இரயிலில் கல்லெறிந்த சம்பவத்தில் மாணவி கடுமையாக காயமடைந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடலுண்டி வடக்கும்பாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (30) என்பவரை திங்கட்கிழமை ரயில்வே போலீஸ் கைது செய்தது. அவர் மயக்கப்பொருள் பயன்படுத்திய பின்னர் ரயிலில் கல்லெறிந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கல்லெறி தாக்குதலில் ஐஸ்வர்யாவின் தாடை எலும்பு கடுமையாக காயமடைந்தது. இடது பக்கத்தில் இரண்டு பற்கள் இழந்ததுடன், உதட்டிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐஸ்வர்யாவுக்கு, சம்பவம் நடந்தது முதல் 20 நாட்கள் கடந்தும் இன்னும் உணவு கூட சாப்பிட முடியாத நிலை உள்ளது. 🥲🥲🥲

மத்திய பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை

Image
  மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை வரவழைத்து, மது புகட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை தேடித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, இரண்டு இளம்பெண்கள் அவரை போபாலுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக பீயர் குடிக்க வைத்துள்ளனர். அவர் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த இரண்டு இளைஞர்களுக்கு அந்தப் பெண்ணை இரையாக்கியுள்ளனர். அந்த காமக் கொடூரன்கள் சுமார் 6 மணி நேரம் அந்தப் பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.     தொடர் சித்திரவதையால் அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அவரை அங்கேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து செயல்பட்ட போபால் போலீசார், சதித் திட்டம் தீட்டிய இரண்டு பெண்கள் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் என மொத்தம் நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளன...

வால்பாறை கொண்டை ஊசி வளைவில் விபத்து

Image
 இது அனைவருக்குமான பதிவு... 📢 வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. 🛣️ இந்த பாதையை நன்கு அறிந்தவர்களே மேலிருந்து கீழே வரும்போது மிகக் கவனமாகத்தான் திரும்புவார்கள். ஆனால், புதியவர்கள் பலர் இந்த வளைவின் ஆபத்தை உணராமல் அலட்சியமாக, அதிவேகமாகத் திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். 🏔️⚠️ இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்புச் சுவரைத் தாண்டி தவறி விழுந்தால், இடையில் உள்ள 12 மற்றும் 10 ஆகிய வளைவுகளைத் தவிர்த்து, நேரடியாக 9-வது வளைவில்தான் போய் விழ நேரிடும். 📉 களப்பணியின் போது நாங்கள் 13-வது வளைவிலிருந்து நேரடியாக 9-வது வளைவு வரை சென்று அந்த ஆபத்தான சரிவை நேரில் பார்த்திருக்கிறோம். 14-வது வளைவிலிருந்து 13-வது வளைவு வரையிலான சாலை சற்று நேராக இருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் அதிவேகமாக வருகிறார்கள். திடீரென வளைவு வரும்போது பிரேக் பிடித்து வேகத்தைக் குறைத்தால் மட்டுமே வண்டியைத் திருப்ப முடியும். அந்தத் தருணத்தில் பிரேக் சரியாகச் செயல்படவில்லை எனில், வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாவது உறுதி. 🚗💥 தற்போது நடந்த விபத...

காயங்குளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; காப்பாற்ற வந்தவர் என நடித்த காமவெறியன்!

Image
  காயங்குளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; காப்பாற்ற வந்தவர் என நடித்த காமவெறியன்! வாகன விபத்தில் காயமடைந்து ரத்தம் சிந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டியது பரிவு. ஆனால் காயம்குளத்தில் நடந்தது மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் கொடூரம். விபத்தில் சிக்கிய இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வர்த்தக அமைப்பு தலைவரான சினில் மேற்கொண்ட பாலியல் தாக்குதல், கேரளத்தை அவமானப்படுத்தியுள்ளது. “எதிர்த்து பேசும் சக்தியே இல்லை,” என்று அந்த பெண் கூறும்போது, நாம் ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய நிலை. வலியால் துடித்துக் கொண்டிருந்த உடலின் மீது திட்டமிட்டு கையை வைத்த அந்த நபரின் செயல், உதவி அல்ல—வெறும் கொடூரம். மருத்துவர்கள் கூட அந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணம் கொடுத்து மௌனம் காக்கச் செய்வதும், மிரட்டி வழிமறிக்க முயற்சிகளும் நடந்துள்ளன. குற்றவாளியை காப்பாற்றும் வகையில் போலீஸ் செயல்பட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டுகிறார். மருத்துவ பரிசோதனைக்கும், ரகசிய வாக்குமூலத்திற்கும் கூட போலீஸ் தயங்கியதற்கு காரணம் என்ன? நீதிக்காக அந்த பெண் நீதிமன்றத்தை நாடும...

விதிமீறல் அலட்சியத்தால் நடந்த விபத்து

Image
  நள்ளிரவில் டீ குடிக்கச் சென்றபோது நேர்ந்த கோரம்:  ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் துடிதுடித்து பலி! **விருதுநகர்:** "டீ குடித்துவிட்டு இதோ வந்துவிடுகிறோம்" என  சென்ற மாணவர்கள், சடலமாகத் திரும்பிய சம்பவம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ### நண்பர்களுடன் நள்ளிரவு பயணம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த கோகுல் (17), அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (17) மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த யுவராஜ் (17) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தனர். சமீபத்தில் தான் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், விடுமுறையை நண்பர்களுடன் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் சுமார் 12 மணி அளவில், நண்பர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் டீ குடிப்பதற்காக சாத்தூர் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ### விபத்து நேர்ந்த...

நொடிப்பொழுதில் மாறிய நம்பர் பிளேட். டாக்டரின் கிளவர் பிளான்!

Image
  நொடிப்பொழுதில் மாறிய நம்பர் பிளேட்.. ஐதராபாத்தை தலைசுற்ற வைத்த டாக்டரின் கிளவர் பிளான்! நடந்தது என்ன சென்னை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின் போது, ஒரு டாக்டர் தன்னுடைய சொகுசு காரின் நம்பர் பிளேட்டை நொடிப் பொழுதில் மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹாலிவுட் படமான ஜேம்ஸ் பாண்டில் வரும் தொழில்நுட்பத்தை நிஜ வாழ்க்கையில் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்திய அந்த டாக்டர் இப்போது போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது? ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கவுதம் ரெட்டி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, தன்னுடைய பி.எம்.டபிள்யூ (BMW) சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால், ஐதராபாத்தின் முக்கியப் பகுதியான ஜூப்ளி ஹில்ஸ் அருகே போலீசார் வழக்கமான தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதையில் கார் ஓட்டி வந்த டாக்டர் கவுதமை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பிறகு அவரிடம் மது பரிசோதனையும் நடத்தப்பட்டது.. அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை வ...

மேற்கு வங்கத்தில் கலவரம். மூன்று பேர் பலி

Image
  பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி, பற்றி எரிகிறது முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில் 30% இஸ்லாமியர்கள் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால் அவர்கள் 50% மாக உயர்ந்தால் மம்தாபானர்ஜி யே ஆட்சியில் இருக்க முடியாது மேற்கு வங்கத்தில் எந்த ஹிந்துவும் முதல்வராக முடியாது, இதுவே உண்மை. அங்கு 500 பேர் வீடுகளை இழந்துள்ளனர், அவர்கள் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சொந்த ஊரிலேயே அந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர் தொடர்ந்து 3 முறை முதல்வர் ஆகியிருக்கிறார் மம்தாபானர்ஜி என்றால் அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை, இந்த 30% இஸ்லாமியர்கள் ஓட்டு மொத்தமாக மம்தாபானர்ஜிக்கு வாக்கு அளிக்கிறார்கள், அதுவே காரணம், அவர்களுக்கு எவ்வளவு மோசமான ஆட்சி நடத்தினாலும் பரவாயிலை ஆனால் அங்கு இருக்கும் இஸ்லாமியர்களை அரசு ஆதரிக்க வேண்டும, அவர்கள் செய்யும் தேச விரோத செயல்களுக்கு தடையாக இருக்க கூடாது, அவர்கள் எந்த வித கலவரமோ அராஜகமோ செய்தாலும் கண்டுகொள்ள கூடாது, இத்தனைக்கும் மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கு மேல் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image
  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் நேயர்கள் விளம்பரதாரர்கள் மற்றும் எங்கள் செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமையும் வாழ்க்கையில் மென்மேலும் பல வெற்றிகளை பற்றி அனைவரும் மனமகிழ்ச்சியோடு ஆரோக்கியத்தோடு சந்தோஷத்தோடு இனிய வாழ்வு அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம்

Image
  பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம். 11.4.26 முதல் கனிமவள வாகனங்கள் #குமரிமாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்லக்கூடிய கனிம வள வாகனங்கள் அனைத்தும் இனி புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு நுழையும். ஏற்கனவே தினம்தோறும் 500 வாகனங்கள் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு செல்கின்றன  600 காலிவாகனங்களாக வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 500 வாகனங்கள் இந்த பாதையில் பயணித்தால் நிலைமை என்னவாகும். விபத்துகள் அதிகமாகும்! சாமானியன் சாலையில் பயணிக்க இயலாத நிலை ஏற்படும். ஏற்கனவே 10.4.26 இன்று இரவு புளியரை சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். நிலைமையை கருத்தில் கொண்டு District Collector Tenkasi | Tenkasi District Police தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். C Krishnamurali MLA | Shahin Fathima | தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் | Niyas NjsR-Tvk  Adv Abubacker  #DMK #TenkasiDistrict #கனிமவளம் #ADMK

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

Image
  🇮🇳ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாகத் Touseef என்ற நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.  👉ராணுவப் பொதுப் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, ராணுவப் பகுதிக்குள் சென்று வர முறையான அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது செல்போனைப் பரிசோதித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நபர்களின் எண்கள் "Chacha Gujjra", "Ahmiii" மற்றும் "Ali bhi" ஆகிய பெயர்களில் சேமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

ஐடி நிறுவனத்தில் பாலியல் தொல்லை. ஒருவர் கைது

Image
 முதலில் ஐடி வேலை..! அடுத்து லீவு போட்டுவிட்டு ஹோட்டலுக்கு போகணும். "பெண் ஊழியர்களை மிரட்டி பலாத்காரம்". இம்புட்டு பெரிய நிறுவனத்திலா..? அதிர வைக்கும் உண்மை.!! மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரம் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மையமாக மாறிவருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அசோக் கராத் மற்றும் பெண்களின் அந்தரங்கப் படங்களை எடுத்து மிரட்டிய ரவீந்திர எரண்டே ஆகியோரின் விவகாரங்கள் அடங்குவதற்குள், தற்போது ஒரு பிரபல ஐடி (IT) நிறுவனத்தில் அரங்கேறியுள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, பெண் ஊழியர்களின் மதம் குறித்து அவதூறாகப் பேசுவது மற்றும் ஆபாசமான செய்கைகளால் அவர்களைத் துன்புறுத்துவது போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு ஆண் ஊழியரை மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய அதிர்ச்சித் தகவலும் வெ...

தடை செய்யப்பட்ட எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் மர்ம மனிதர்

Image
  🇮🇳ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டம் காஜுவாலா பகுதியில், சர்வதேச எல்லைக்கு மிக அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய ரெனே என்ற நபர் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். 👉பாதுகாக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பிகானேரில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது பாஸ்போர்ட் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

கடன் கொடுத்தவர் தற்கொலை

Image
  கடன் கொடுத்தவர் தற்கொலை..  கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவில் வசித்தவர் சுப்பையா மகன் சந்திரன் (வயது 72). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். கடையநல்லூர் மதினா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் முகமது ரபீக். இவர் அப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டல் நடத்தி வந்தார். அப்பொழுது சந்திரனிடம் ஓட்டல் உரிமையாளர் முகமது ரபிக் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் மேலும் 17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முகமது ரபீக் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனக்கு சொந்தமான நிலத்தை சந்திரனுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் அது போலி பத்திரம் என தெரிய வந்ததால், தான் கொடுத்த 27 லட்ச ரூபாய் பணத்தை திரும்பி கேட்டதால் முகமது ரபீக் ஓட்டலை மூடிவிட்டு தலைமறைவானார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக முகமது ரபீக் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தார்களிடம் பணத்தை கேட்ட நிலையில் பணம் திரும்ப கிடைக்காது என்ற விரக்தியில் நேற்று முகமது ரபீக்கின் வீட்டு வாசலில் சந்திரன் உடலில் மண் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல்...

வாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண் விபத்தில் மரணம்

Image
  📌கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே நிகழ்ந்த இந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 📌ஏப்ரல் 6, 2026 ஆலுவா - எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முட்டம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. 📌 லிஃப்ட் கேட்ட பயணம்: நந்தனா (23) எடப்பள்ளி நோக்கிச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அஷ்வின் ஆண்டனி என்பவரிடம் நந்தனா 'லிஃப்ட்' கேட்டுப் பயணித்துள்ளார். 📌 இவர்கள் சென்ற பைக் முட்டம் பகுதியில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதியது. பாதிப்புகள் 📌பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நந்தனா, கார் மீது மோதி கீழே விழுந்தபோது அவருக்குத் தலையில் மிகப்பலத்த காயம் ஏற்பட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தாரா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றாலும், அடிபட்ட வேகம் அதிகமாக இருந்ததால் அவர் சம்பவ இடத்திலே...

ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து விபத்து

Image
  சற்று முன்பு (07/04/2026) ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பேருந்து சாலை ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வோம். 🙏✨ #NewsUpdate #RoadSafety #TamilNews #Thoothukudi #Eral #BusAccident #SafetyFirst #MorningVibes #TamilNadu #PublicTransport #StaySafe 🚌⚠️

பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் தற்கொலைச் சம்பவம்.

Image
  பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் தற்கொலைச் சம்பவம்.  பெங்களூருவின் வடக்கு பகுதியில் உள்ள ஹென்னூர் அருகே இருக்கும் 'பாரதிய சிட்டி' (Bhartiya City) என்ற பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  தெலுங்கானாவைச் சேர்ந்த பானு சந்தர்  (32) மற்றும் அவரது மனைவி பீபி ஷாஜியா (31) ஆகிய இருவரும் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் திருமணமாகி வாழ்ந்து வந்தனர்.  ஷாஜியா பெங்களூருவில் உள்ள IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.  பானு சந்தர் சம்பவம் நடந்த நேரத்தில்  வேலை எதுவும் பார்க்கவில்லை. அவர் முன்பு அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றி அங்கு வேலை இழந்ததைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியுள்ளார். நேற்று (மார்ச் 30, 2026), இந்தத் தம்பதியினருக்கு இடையே ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பானு சந்தர், தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  வேலை முடிந்து வீடு திரும்பிய ஷாஜியா, நீண்ட நேரம் கதவைத்...

வாடகை பாக்கி கேட்டவரின் மகள் கொலை

Image
 வாடகை பாக்கி வைத்திருப்பது தொடர்பாக ஏற்பட்ட த*கராறில், தனது வீட்டு உரிமையாளரின் 8 வயது மகளைக் க*டத்தி கொ*லை செய்த நபர்; கண்டுபிடித்து என்கவுண்டர் செய்த யோகி அரசு...! காலணி உற்பத்தி ஆலையில் பணிபுரிந்து வந்த சுனில் குமார், கடந்த ஒரு வருடமாக ஒரு மூன்று மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. குமார் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை குழந்தை காணாமல் போனதை அடுத்து, மறுநாள் சுனிலின் அறையில் க*ழுத்து அ*றுக்கப்பட்ட நிலையில் அலுமினியப் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் ச*டலம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதற்குள், சுனில் தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய உதவும் தகவலுக்கு ரூ.25,000 வெகுமதி அறிவித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர் ஃபிரோசாபாத்திற்குத் தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக சனிக்கிழமை அதிகாலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு காவல் குழு அங்கு விரைந்து சென்று, அவர் பதுங்கியிருப்பதாக நம...

தாம்பரம் அருகே கடன் தொல்லையினால் இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் த*ற்கொ*லை

Image
  தாம்பரம் அருகே கடன் தொல்லையினால் இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் த*ற்கொ*லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ*திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  படப்பையை அடுத்த மாடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஷாம்ஷியா (26), தனது கணவர் ஆசிப் கடந்த ஆண்டு தொழில் ந*ஷ்டம் காரணமாக த*ற்கொ*லை செய்துகொண்ட நிலையில், தன் இரண்டு கு*ழந்தைகளான ஆசிபா (10) மற்றும் அப்சர் (5) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.  கணவர் ம*றைவிற்குப் பிறகும் தீராத கடன் சுமைகளால் அவர் மன உ*ளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தன் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த ஷாம்ஷியா, சமீபகாலமாக சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அங்கு செல்லவில்லை. நேற்று காலை மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ஷாம்ஷியா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உ*டல்கள் மி*தப்பதைக் கண்டு அ*திர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ம...