வாடகை பாக்கி கேட்டவரின் மகள் கொலை



 வாடகை பாக்கி வைத்திருப்பது தொடர்பாக ஏற்பட்ட த*கராறில், தனது வீட்டு உரிமையாளரின் 8 வயது மகளைக் க*டத்தி கொ*லை செய்த நபர்; கண்டுபிடித்து என்கவுண்டர் செய்த யோகி அரசு...!


காலணி உற்பத்தி ஆலையில் பணிபுரிந்து வந்த சுனில் குமார், கடந்த ஒரு வருடமாக ஒரு மூன்று மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. குமார் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார்.


செவ்வாய்க்கிழமை குழந்தை காணாமல் போனதை அடுத்து, மறுநாள் சுனிலின் அறையில் க*ழுத்து அ*றுக்கப்பட்ட நிலையில் அலுமினியப் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் ச*டலம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.


அதற்குள், சுனில் தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய உதவும் தகவலுக்கு ரூ.25,000 வெகுமதி அறிவித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.


குற்றம் சாட்டப்பட்டவர் ஃபிரோசாபாத்திற்குத் தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக சனிக்கிழமை அதிகாலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு காவல் குழு அங்கு விரைந்து சென்று, அவர் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்ட பகுதியைச் சுற்றி வளைத்தது.


காவல்துறையினரின் கூற்றுப்படி, குழுவைக் கண்டதும் சுனில் து*ப்பாக்கிச் சூடு நடத்தியதில், உதவி ஆய்வாளர் விஸ்வஜீத் ராணாவின் கையில் கா*யம் ஏற்பட்டது. காவல்துறையினர் பதிலடி கொடுத்துத் திருப்பிச் சு*ட்டதில், இந்த து*ப்பாக்கிச் ச*ண்டையில் சுனில் இ*றந்து போனார்.


முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு, செலுத்தப்படாத வாடகை தொடர்பாக சுனில், சிறுமியின் மாமா மற்றும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்ததாகத் தெரிவித்தனர். 


இதில் சிறுமியின் மாமா, சுனிலை அறைந்து அவரது அறையைப் பூட்டி சாவியை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், சுனில் பின்னர் பாக்கித் தொகையைச் செலுத்திவிட்டு அறையின் சாவியை திரும்பப் பெற்றுக்கொண்டார்.


தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் விதமாகவே வீட்டு ஓனரின் மகளை கொ*லை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ஆரம்பத்தில் சிறுமியின் குடும்பத்தினருடன் சேர்ந்து அச்சிறுமியைத் தேடியதாகவும், அவர்களுடன் காவல் நிலையத்திற்கும் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவரது வீடு உட்பட அருகிலுள்ள வீடுகளைத் தேடுமாறு குடும்பத்தினர் காவல்துறையினரை வலியுறுத்தியபோது, ​​சுனில் திடீரெனக் காணாமல் போனார்.


இதிலிருந்து தான் சுனிலின் மேல் போலீசாரின் சந்தேகம் திரும்பியுள்ளது 


சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சுனிலின் அறைக்கதவை உடைத்துக்கொண்டு திறந்து பார்த்தபோது, ​​சிறுமியின் ச*டலத்தைக் கண்டெடுத்ததாக போலீசார் கூறினர்.


பழிவாங்கும் நடவடிக்கையாக கு*ற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் கொ*லையைச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


யோகியின் தலைமையில் செயல்படும் உ.பி அரசு குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் த*ண்டனை தருவதால் அங்குள்ள ரவுடிகள் அலறி போய் உள்ளனர்.


Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்