திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

 


இந்திய திரை உலகில் மோதிரக் கையால் குட்டு வாங்கி பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் திரு மாதவன் அவர்கள்.

 அதன் பின் அவர் மின்னலே ரன் போன்ற ரொமான்டிக் படங்களில் வெற்றிக்கொடி நாட்டில் வந்தார். இப்படி சாதாரண கமர்சியல் படங்களில் ஆரம்பித்த அவருடைய திரை பயணம் பின்னர் மெல்ல மாற ஆரம்பித்து இறுதிச்சுற்று, ராக்கெட்டரி மற்றும் துரந்தர் என இந்திய திரையரங்க மட்டுமல்லாமல் உலக திரைத்துறையை திரும்பிப் பார்க்கும் தரமான படங்கள் பக்கம் தன் கவனத்தை செலுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.


  தற்போதைய படங்களை தேர்ந்தெடுக்க அவர் செலுத்தும் தனி கவனம் மற்றும் அவரது நடிப்பு போன்றவை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.

 நமது தமிழ் சினிமா உலகில் பல குப்பை படங்களை கமர்சியல் படங்கள் என்ற பெயரில் கொடுத்த விஜய் போன்ற ஹீரோக்களை எல்லாம் கொண்டாடும் திரையுலகம் நல்ல தரமான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த படங்களை உருவாக்கும் மாதவன் போன்றவர்களை கொண்டாடாமல் இருப்பது தமிழ் திரை உலகத்திற்கு தான் இழப்பை தவிர மாதவன் போன்றவர்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும்.


 இயக்குனர் பலரும் மாதவன் போன்ற ஒரு சிறந்த நடிகரை பயன்படுத்தி நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களை கொடுத்தால் தமிழ் திரையரங்கமும் உலக அரங்கில் திரும்பிப் பார்க்க வைக்கும் நிலைக்கு  கொண்டு வரலாம்.



Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?