வால்பாறை கொண்டை ஊசி வளைவில் விபத்து



 இது அனைவருக்குமான பதிவு... 📢


வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. 🛣️ இந்த பாதையை நன்கு அறிந்தவர்களே மேலிருந்து கீழே வரும்போது மிகக் கவனமாகத்தான் திரும்புவார்கள். ஆனால், புதியவர்கள் பலர் இந்த வளைவின் ஆபத்தை உணராமல் அலட்சியமாக, அதிவேகமாகத் திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். 🏔️⚠️


இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்புச் சுவரைத் தாண்டி தவறி விழுந்தால், இடையில் உள்ள 12 மற்றும் 10 ஆகிய வளைவுகளைத் தவிர்த்து, நேரடியாக 9-வது வளைவில்தான் போய் விழ நேரிடும். 📉 களப்பணியின் போது நாங்கள் 13-வது வளைவிலிருந்து நேரடியாக 9-வது வளைவு வரை சென்று அந்த ஆபத்தான சரிவை நேரில் பார்த்திருக்கிறோம்.


14-வது வளைவிலிருந்து 13-வது வளைவு வரையிலான சாலை சற்று நேராக இருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் அதிவேகமாக வருகிறார்கள். திடீரென வளைவு வரும்போது பிரேக் பிடித்து வேகத்தைக் குறைத்தால் மட்டுமே வண்டியைத் திருப்ப முடியும். அந்தத் தருணத்தில் பிரேக் சரியாகச் செயல்படவில்லை எனில், வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாவது உறுதி. 🚗💥


தற்போது நடந்த விபத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியவில்லை என்றாலும், நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது இப்படித்தான் நிகழ்ந்திருக்கக்கூடும் என நாம் யூகிக்க முடிகிறது. 🧐


வாகனம் ஓட்டுபவர்கள் மிகக் கவனமாகவும், நிதானமாகவும் ஓட்ட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களை நம்பிதான் உங்கள் குடும்பங்கள் இருக்கின்றன. 🙏👨‍👩‍👧‍👦


உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். 🕯️ அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🥀


பாலகுமாரன் அவர்களின் பதிவு இது... அந்தந்த ஊரில் இருப்பவர்களுக்கே தெரியும் அங்குள்ள நிலவரம்... ✍️


#Valparai #RoadSafety #SafeDriving #ValparaiHairpinBend #SafetyFirst #DriveSafe #ValparaiDiaries #Alert #Awareness #AccidentPrevention #TamilnaduTourism #HillStationDrive #CarefulDriving #valparai7thheaven #valparai #kovai #keralam #Kasaragodu #malappuram

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்