ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி 

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பயன்படுத்தி பயன்படுத்தி வருவது ஆன்லைன் வர்த்தகத்தை தான். 
இது வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை தொலைபேசி வாயிலாக கண்டறிந்து அவற்றின் தரம் குறித்த விபரங்களை ரிவ்யூகள் மூலமாக அறிந்து கொண்டு ஆர்டர் செய்ய வசதியாக உள்ளது. மேலும் பல பொருட்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைக்கிறது. பொருட்களை வாங்க பல கடைகளுக்கு அணிந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற காரணங்களால் மக்கள் அதிகம் பயன்படுத்துவது ஆன்லைன் வர்த்தக தளங்களாக மாறி வருகிறது. 
இப்போது இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் பல பொருட்கள் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வருகிறது. 
இதனால் நமது நாட்டில் நடக்கும் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி தொகை மற்றும் லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்கிறது. 
இதனால் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு நமது நாட்டின் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். இதனால் நாம் வாங்கும் பொருட்களுக்கு அதிக தொகை செலவிட வேண்டி வரும். அதுமட்டுமல்லாது நம் நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புகளும் உள்ளது. மேலும் நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைய அதிகம் வாய்ப்புகள் உள்ளது. 
இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டில் உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகம் குறைய வாய்ப்புள்ளதோடு விலைவாசியும் அதிகரித்து மக்களிடம் பணப்பழக்கம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. 
இதனைத் தவிர்க்க நாம் வாங்கும் பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொழுதும் உள்ளூர் வணிக ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவதும் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்குவதும் முடிந்த அளவிற்கு நமது பகுதியில் உள்ள சில்லறை வர்த்தக கடைகளில் பொருட்களை வாங்குவதும் சிறந்தது. 
இதனை இன்றைய தலைமுறை மக்கள் உணர்ந்து இனி தேவையான பொருட்களை உள்ளூர் வர்த்தக சந்தைகளிலோ அல்லது உள்ளூர் ஆன்லைன் தளங்களிலோ வாங்குவதால் நமது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதோடு நாம் வாழ்க்கையும் வளமாக உதவும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 

இன்று பெருமளவில் வர்த்தகம் செய்யும் பிளிப்கார்ட் அமேசான் ஸ்விகி சொமேட்டோ போன்ற பல இணையதளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் விற்பனை தளங்களே. இவற்றில் நீங்கள் செய்யும் வர்த்தகத்தில் வரும் லாபத்தினை அவர்கள் தங்களது நாட்டிற்கு கொண்டு செல்வதால் நமது நாட்டின் அன்னிய செலாவணியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொண்டு உள்ளூர் தளங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்