Posts

Showing posts from September, 2026

ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இரட்டை நிலைப்பாடு

Image
  தமிழகத்தில் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை பார்ப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள்.  அவர் தனது வளையளிப்பக்கங்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை தெரிவிப்பார்.  திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அபிமானி என்பதால் தனது கருத்துக்களில் எப்போதும் ஒரு சார்பு நிலைப்பாடோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆளும் பாஜக அரசு மற்றும் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ப்ரமோட்டோர்களையும் தாக்கிப் பேசும் ஒரு சார்பு நிலைப்பாடு கொண்டவர்.  இவர் தற்போது டாடா நிறுவனத்தில் வெடித்துள்ள பிரச்சனையைப் பற்றி பேசும் பொழுது டாட்டா நிறுவனத்தின் இறுதி முடிவுகளை எடுக்கக்கூடிய  தகுதியும் அதிகாரமும் டாட்டா நிறுவனத்தின் நோயல்  டாட்டா அவர்களுக்கு தான் உண்டு என்று கூறியிருந்தார். அது முற்றிலும் சரியானது தான். அதேபோல் எடுத்துக்காட்டு அவர் கூறும் பொழுது போர்டு நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை கூறியிருந்தார். அதுவும் சரியானது தான்.  ஆனால் அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனத்திலையோ அல்லது அதானி நிறுவனத்திலையோ ...

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

Image
 #இலஞ்சிபேரூராட்சி  #தென்காசிமாவட்டம்  தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனத்திற்கு   இலஞ்சியில் உள்ள இலஞ்சி பேரூராட்சிதுணைத் தலைவர் அலுவலகத்துக்கு எதிரிலேயே தினமும் சில விஷமிகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒரு பள்ளி வளாகமாக இருப்பதாலும் பல குழந்தைகள் அந்த வழியாக பள்ளிக்கு சென்று வருவதால் குழந்தைகளுக்கு பல நோய்த்தொற்றுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற குப்பைகளை கொட்டி இருப்பதை இளஞ்சி பேரூராட்சி நிர்வாகம் தடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலஞ்சி துப்புரவு பணியாளர்கள் துணைத் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு மட்டும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து உள்ளனர். எனினும் எதிரே உள்ள சுகாதார சீர்கேடு பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.  அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆம்னி பேருந்தில் நகை திருட்டு. குற்றவாளி கைது

Image
 தூத்துக்குடி மாவட்டம்கயத்தாறு அருகே உணவகத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் நகை திருட்டு  -மத்தியபிரதேசத்தில் முக்கிய குற்றவாளி கைது; 40. 08 பவுன் நகை மீட்பு* திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவரும் அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ் இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்றனர். பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறையடுத்த கரிசல்குளம் விளக்கில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது பேருந்தில் ஜூலியட் லதா ஜெயக்குமார் சுமார் 40.08 பவுன் தங்க நகை உடன் வைத்து விட்டு சென்ற பையை காணாமல் போயிருந்தது.இதுகுறித்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளிடம் விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிந்து உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த செல்போன் அழைப்புகள் விபரங்களையும்  ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தூத்துக்குடி...