ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இரட்டை நிலைப்பாடு
தமிழகத்தில் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை பார்ப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள்.
அவர் தனது வளையளிப்பக்கங்களிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை தெரிவிப்பார்.
திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அபிமானி என்பதால் தனது கருத்துக்களில் எப்போதும் ஒரு சார்பு நிலைப்பாடோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆளும் பாஜக அரசு மற்றும் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ப்ரமோட்டோர்களையும் தாக்கிப் பேசும் ஒரு சார்பு நிலைப்பாடு கொண்டவர்.
இவர் தற்போது டாடா நிறுவனத்தில் வெடித்துள்ள பிரச்சனையைப் பற்றி பேசும் பொழுது டாட்டா நிறுவனத்தின் இறுதி முடிவுகளை எடுக்கக்கூடிய தகுதியும் அதிகாரமும் டாட்டா நிறுவனத்தின் நோயல் டாட்டா அவர்களுக்கு தான் உண்டு என்று கூறியிருந்தார். அது முற்றிலும் சரியானது தான். அதேபோல் எடுத்துக்காட்டு அவர் கூறும் பொழுது போர்டு நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை கூறியிருந்தார். அதுவும் சரியானது தான்.
ஆனால் அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனத்திலையோ அல்லது அதானி நிறுவனத்திலையோ இது போன்று பிரமோட்டர்கள் முடிவெடுப்பதை ஒரு குடும்பத்தின் நிலைப்பாடு என்று தன் நாக்கை பச்சோந்தி போல் மாற்றி மாற்றி பேசுவார். எப்போதுமே ஒரு நிறுவனத்தில் பெருவாரியான பங்குகளை வைத்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தனிநபர் எடுக்க முடிவுகளையே எல்லா நிறுவனங்களும் பின்பற்றும் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் இவருக்கு பிடித்த நிறுவனங்களுக்கு ஒரு வித கருத்தையும் பிடிக்காத நிறுவனங்களுக்கு எதிர் கருத்தையும் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. இது இரட்டை நிலைப்பாடு கொண்ட பச்சோந்தித்தனம் என்பது எப்போது அவருக்கு புரியும்.
அதுமட்டுமல்லாமல் அவருக்கு பிடிக்காத எதிரான நிறுவனங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தாலும் அதனை எந்த காலத்தில் ஒப்புக்கொள்ள மாட்டார். தான் பரிந்துரைத்த சில நிறுவனங்கள் சரியாக செயல்படாமல் பங்கு விளை வீழ்ச்சியை நோக்கி சென்றாலும் அதற்கு சப்பை கட்டுக்கட்டுவார்.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய புத்திசாலி பொருளாதார நிபுணராக இருந்தாலும் அவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து பங்குகளுமே வெற்றியை நோக்கி செல்லாது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே தான் பரிந்துரைத்த பங்குகளில் சிலவற்றை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை தவறு நேர்ந்து விட்டது என்று ஒருநாளும் அவர் ஒப்புக்கொண்டது இல்லை.
தான் என்ற ஒரு அகங்கார மனநிலையிலேயே இருப்பவர் தான் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள். அவரைப் பொறுத்தவரை அவர் மட்டுமே மிகவும் மகா புத்திசாலி என்றும் மற்றவர்கள் எல்லாம் ஏதோ சராசரி புத்திசாலிகள் போலவும் பலரை புத்தி இல்லாதவர்கள் என்பது போலவும் ஏளனமாக பேசும் கீழ்த்தரமான புத்தி படைத்தவர்.


Comments
Post a Comment