கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

 

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அபர்ஜித் தீர்க்க என்ற இளைஞர் இந்தியாவில் அரசியல் செய்ய கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை உருவாக்கினார்.

 இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்ற அமைப்பின் மூலம் நாட்டின் பல இடங்களில் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதை வைத்து அரசியல் சூழ்நிலையை மாற்ற முடியாதா? என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

 இவர்கள் நோக்கம் என்னவாக இருக்கிறது என்றால் இந்திய அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த அரசும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஏதாவது ஒரு நெருக்கடிக்கு உள்ளாய் கொண்டே இருக்க வேண்டும்.
 அப்போதுதான் அவர்களால் நாட்டின் வளர்ச்சி பற்றியோ அல்லது அடுத்த கட்டத்திட்டங்கள் பற்றியோ யோசிக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.



 அதுமட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறை எப்படியாவது தங்கள் வலைக்குள் வீழ்த்தி தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர்.
 கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதில் அவர்களால் எந்த வித பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளையோ நிர்வாக சீர்கேடுகளையோ அல்லது வேறு ஏதும் குற்றங்களையோ சுமத்த முடியவில்லை.

 அதுமட்டுமல்லாமல் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஓர் அணியில் நின்றாலும் மத்தியில் உள்ள நரேந்திர மோடி அவர்களின் அரசை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அவர்கள் தற்போது எடுத்துள்ள புதிய ஆயுதம் தான் இந்த கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி.

 எப்படி கரப்பான் பூச்சியால் யாருக்கும் எந்த பயனும் இல்லையோ அதேபோல் இந்த கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியால் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்