இந்தியாவில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை கொ*ல்ல பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு துரோகிகள் போலீசாரால் கைது..!

 இந்தியாவில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை கொ*ல்ல பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு துரோகிகள் போலீசாரால் கைது..!


உத்தர பிரதேசத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்காக வேலை செய்ததாக மீரட்டைச் சேர்ந்த துஷார் சௌஹான் என்ற ஹிஸ்புல்லா அலி கான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமீர் கான் என்ற இருவரை ப*யங்கரவா*த எதிர்ப்புப் படை (ATS) கைது செய்தது


துஷார் மற்றும் சமீரும், பாகிஸ்தான் தீ*விரவா*த இயக்கத்தை சேர்ந்த ஷாசாத் பட்டி மற்றும் அபித் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவர்கள் இளைஞர்களைத் தங்கள் வலையமைப்பில் சேர்ப்பதற்காக ஈர்க்கும் பணி அந்த இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதற்காக அவர்களுக்குப் பெரும் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்தியாவில் தங்களது பணிகள் முடிந்த பிறகு, ஒரு வளைகுடா நாடு வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் துஷார் மற்றும் சமீருக்கு உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​முக்கிய இந்துத் தலைவர்களை ஒழிக்கும் நோக்கத்துடனும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கத்துடனும் அவர்கள் தகவல்களைச் சேகரித்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த இலக்குகள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யால் வழங்கப்படவிருந்தன.


Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்