கடன் கொடுத்தவர் தற்கொலை

 


கடன் கொடுத்தவர் தற்கொலை.. 


கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவில் வசித்தவர் சுப்பையா மகன் சந்திரன் (வயது 72). இவர் தச்சு தொழில் செய்து வந்தார்.


கடையநல்லூர் மதினா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் முகமது ரபீக். இவர் அப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டல் நடத்தி வந்தார். அப்பொழுது சந்திரனிடம் ஓட்டல் உரிமையாளர் முகமது ரபிக் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.


அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் மேலும் 17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முகமது ரபீக் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனக்கு சொந்தமான நிலத்தை சந்திரனுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.


பின்னர் அது போலி பத்திரம் என தெரிய வந்ததால், தான் கொடுத்த 27 லட்ச ரூபாய் பணத்தை திரும்பி கேட்டதால் முகமது ரபீக் ஓட்டலை மூடிவிட்டு தலைமறைவானார்.


தொடர்ந்து 5 ஆண்டுகளாக முகமது ரபீக் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தார்களிடம் பணத்தை கேட்ட நிலையில் பணம் திரும்ப கிடைக்காது என்ற விரக்தியில் நேற்று முகமது ரபீக்கின் வீட்டு வாசலில் சந்திரன் உடலில் மண் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்