ஐடி நிறுவனத்தில் பாலியல் தொல்லை. ஒருவர் கைது
முதலில் ஐடி வேலை..! அடுத்து லீவு போட்டுவிட்டு ஹோட்டலுக்கு போகணும். "பெண் ஊழியர்களை மிரட்டி பலாத்காரம்". இம்புட்டு பெரிய நிறுவனத்திலா..? அதிர வைக்கும் உண்மை.!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரம் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மையமாக மாறிவருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அசோக் கராத் மற்றும் பெண்களின் அந்தரங்கப் படங்களை எடுத்து மிரட்டிய ரவீந்திர எரண்டே ஆகியோரின் விவகாரங்கள் அடங்குவதற்குள், தற்போது ஒரு பிரபல ஐடி (IT) நிறுவனத்தில் அரங்கேறியுள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, பெண் ஊழியர்களின் மதம் குறித்து அவதூறாகப் பேசுவது மற்றும் ஆபாசமான செய்கைகளால் அவர்களைத் துன்புறுத்துவது போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஒரு ஆண் ஊழியரை மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மும்பை நாகா காவல் நிலையத்தில் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, முதலில் நேர்காணல் நடத்தி எனக்கு வேலை வாங்கித் தந்தனர். 'என்னால்தான் உனக்கு வேலை கிடைத்தது' என்று அடிக்கடி கூறி, என்னை ஒருவிதமான கடப்பாட்டு உணர்வுக்குத் தள்ளினர். பின்னர் கட்டாயப்படுத்தி விடுப்பு எடுக்க வைத்து, விடுமுறை நாட்களில் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மார்ச் 25-ஆம் தேதி முதன்முதலில் தேவ்லாலி முகாம் பகுதியில் இது தொடர்பாக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் அடுத்தடுத்து 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக், ஷாருக் குரேஷி, ரசா மேமன் மற்றும் தௌசிப் அத்தார் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், போலீஸார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#viralcontent #relationships #Drama #celebritynews #history #suspense

Comments
Post a Comment