தாம்பரம் அருகே கடன் தொல்லையினால் இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் த*ற்கொ*லை

 


தாம்பரம் அருகே கடன் தொல்லையினால் இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் த*ற்கொ*லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ*திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


படப்பையை அடுத்த மாடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஷாம்ஷியா (26), தனது கணவர் ஆசிப் கடந்த ஆண்டு தொழில் ந*ஷ்டம் காரணமாக த*ற்கொ*லை செய்துகொண்ட நிலையில், தன் இரண்டு கு*ழந்தைகளான ஆசிபா (10) மற்றும் அப்சர் (5) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். 


கணவர் ம*றைவிற்குப் பிறகும் தீராத கடன் சுமைகளால் அவர் மன உ*ளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


தன் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த ஷாம்ஷியா, சமீபகாலமாக சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார். 


இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அங்கு செல்லவில்லை. நேற்று காலை மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ஷாம்ஷியா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உ*டல்கள் மி*தப்பதைக் கண்டு அ*திர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஷாம்ஷியா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சி*க்கியுள்ளது. 


அதில் கடன் தொ*ல்லையினால் இந்த வி*பரீத முடிவை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கணவரை இ*ழந்த து*யரம் ஒருபுறம் இருக்க, மீள முடியாத கடன் சுமையே இந்த இளம் உயிர்களைப் ப*லிவாங்கியுள்ளது.


சக்திக்கு மீறி கடன் வாங்கி தொழில் செய்பவர்கள், அந்த கடனை அடைக்க மீண்டும் கடன் வாங்கி ஒரு சுழலில் சி*க்கிக் கொள்கிறார்கள். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியும், சமூகத்தில் ஏற்படும் அவமானமும் இத்தகைய த*வறான முடிவுகளுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன. 


த*ற்கொ*லை என்பது எதற்கும் தீர்வாகாது என்பதை உணர்ந்து, நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் உரிய ஆலோசனைகளையும் உதவியையும் நாட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். இந்தச் சோ*கமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவே*தனையை ஏற்படுத்தியுள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்