இரயிலில் கல் எரிந்து ஒருவர் காயம். ஒருவர் கைது
இரயிலில் கல்லெறிந்த சம்பவத்தில் மாணவி கடுமையாக காயமடைந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடலுண்டி வடக்கும்பாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (30) என்பவரை திங்கட்கிழமை ரயில்வே போலீஸ் கைது செய்தது. அவர் மயக்கப்பொருள் பயன்படுத்திய பின்னர் ரயிலில் கல்லெறிந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கல்லெறி தாக்குதலில் ஐஸ்வர்யாவின் தாடை எலும்பு கடுமையாக காயமடைந்தது. இடது பக்கத்தில் இரண்டு பற்கள் இழந்ததுடன், உதட்டிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐஸ்வர்யாவுக்கு, சம்பவம் நடந்தது முதல் 20 நாட்கள் கடந்தும் இன்னும் உணவு கூட சாப்பிட முடியாத நிலை உள்ளது.
🥲🥲🥲

Comments
Post a Comment