கேரளாவில் மீண்டும் ஒரு துயரச்சம்பவம்
கேரளாவில் பதனம்திட்டா மாவட்டம் கடம்பனாடு பகுதியில், 35 வயதான ரேணு அனில் என்ற பெண், தனது கணவரின் வீட்டில் பிப்ரவரி 14, 2026 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ரிசெப்ஷனிஸ்டாக பணியாற்றி வந்தார்.
இந்த சம்பவத்தில், #யூத்_காங்கிரஸ் மாநில செயலாளரான சுஹைல் அன்சாரி (33 வயது, புனலூர்), அதே பள்ளியில் பிஆர்ஓவாக பணியாற்றியவன், தற்கொலைக்கு தூண்டியதற்காக பிப்ரவரி 18, 2026 அன்று கைது செய்யப்பட்டான்.
ரேணு அனிலின் தற்கொலை குறிப்பு, டைரி குறிப்புகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களில், சுஹைல் அவரை தொடர்ந்து செய்திகள் அனுப்பி மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், உடல் உறவுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தனிப்பட்ட புகைப்படங்கள் கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பாலியல் தொல்லை மற்றும் விரக்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், உடலில் இருந்த காயங்கள் காரணமாக கணவர்மீது சந்தேகம் விழுந்தது, ஆனால் குறிப்புகள் மற்றும் உரையாடல்கள் சுஹைல் அன்சாரியை சுட்டிக்காட்டியதால், போலீசார் அவனை விசாரித்து கைது செய்தனர்.
மேலும் அவனுக்கு இந்திய தண்டனைச் சட்டம் (BNS) பிரிவுகள் 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் 78 (பின்தொடர்தல்) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டான்.

Comments
Post a Comment