பிச்சைக்காரன் ஆக வாழ்வது லட்சாதிபதியாக இறந்த முதியவர்

 



கோவில் வாசலில் பிச்சை எடுத்த முதியவர்.. இறந்த பிறகு பெட்டியைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!


Ambala நகரில் மூன்று சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து வந்த லெக்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி முதியவரின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 10 ஆண்டுகளாக அனுமன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்த இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் சாலையில் விழுந்த நிலையில், 'வந்தே மாதரம்' குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை உரிமை கோர யாரும் வராததால், அந்த தன்னார்வக் குழுவினரே அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.


இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு போலீசார் அவர் பயன்படுத்திய பெட்டியைச் சோதனையிட்டபோது, அவர் ஒரு லட்சாதிபதி என்பது தெரியவந்தது. அந்தப் பெட்டியில் சுமார் ₹66,000 ரொக்கப்பணம் மற்றும் இரண்டு வங்கி பாஸ்புக்குகள் கண்டெடுக்கப்பட்டன.


அந்த வங்கிக் கணக்குகளில் ₹3 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருப்பு இருந்தது விசாரணையில் உறுதியானது. ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்த முதியவரிடம் இவ்வளவு பெரிய தொகை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்தப் பணத்தை போலீசார் பாதுகாப்பாகக் கருவூலத்தில் வைத்துள்ளனர்

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்