போதையின் உச்சத்தில் அடாவடி செய்த இளைஞர்
இருதினங்களுக்கு முன்பு கமுதி பேருந்து நிலையத்தின் முன்பாக காரை தாறுமாறாக ஓட்டி குடிகாரபய ஏற்புட்டுத்திய சம்பவம் அனைவரும் அறிந்திருப்போம்... அதன் விபரம்...😡
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாறு பகுதியில் மது அருந்திய பின்னர், போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய ஒரு நபர் ஏற்படுத்திய பெரும் கலவரம் மற்றும் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.😡
சிங்கபுளியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான நாகவடிவேல் என்பவர், கூட்டாளிகளுடன் டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். தலைக்கேறிய போதையில் தள்ளாடும் நிலையில் காரை எடுத்து ஓட்டி வந்துள்ளார்.😪😪
கமுதி நோக்கி வரும் குறுகிய சாலையில், பின்னால் வந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரின் பைக்கிற்கு வழிவிடாமல் நடுவழியில் காரை நிறுத்தியுள்ளார்.😡😡
இதனால் ஏற்பட்ட தகராறில், காரில் இருந்த கூட்டாளி ஒருவர் இறங்கி பைக் சாவியைப் பறித்து சண்டையிட்டுள்ளார். நாகவடிவேல் காரை ரிவர்ஸ் எடுத்து பைக் மீது மோ*தியதாகக் கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் பாண்டியன் காயமடைந்த நிலையில், நாகவடிவேல் தப்பி ஓடியுள்ளார்.😡😡😡
கமுதி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, போதையின் உச்சத்தில் கண்ணில் பட்ட அனைத்து பைக்குகளையும் வெறியுடன் இடித்துத் தள்ளத் தொடங்கியுள்ளார்.😡😡😡
சாலையோரம் நின்றிருந்த பல இருசக்கர வாகனங்கள், கார்கள் சேதமடைந்துள்ளன. மேலும், தன்னுடன் வந்த கூட்டாளி ஒருவரின் மீதே காரை ஏற்றி, அவரது காலை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.😪😪😪
பின்னர், மெக்கானிக் ஷாப் மீது மோதி, மீண்டும் ரிவர்ஸ் எடுத்து அருகிலிருந்த பழக்கடைக்குள் காரைப் புகுத்தியுள்ளார். தர்பூசணி உள்ளிட்ட பழக்கூடைகள் சிதறி, கடை முழுவதும் சேதமடைந்துள்ளது.
காரை வெளியே எடுக்க முடியாத நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரைச் சூழ்ந்து, கண்ணாடிகளை உடைத்து நாகவடிவேலுவை இறக்க முயன்றனர்.
காருக்குள் இருந்தபடியே ஆபாசமாகப் பேசிய நாகவடிவேல், இறங்கியதும் போதையில் மல்லாக்கப் படுத்து நாடகமாடத் தொடங்கியுள்ளார். பொதுமக்களுக்கும் அவருக்கும் இடையே போலீஸார் மத்தியஸ்தம் செய்து, சிரமப்பட்டு கட்டுப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த இருவரை (கால் முறிவு உள்ளிட்ட காயங்கள்) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், நாகவடிவேல்வை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.😪😪
இந்த சம்பவம், மது போதை ஒரு மனிதனை எவ்வளவு ஆபத்தான நிலைக்கு தள்ளும் என்பதற்கு தெளிவான உதாரணமாக அமைந்துள்ளது. கார் சேதம், பல வாகனங்கள் அழிவு, இருவர் கால் உடைவு என பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது.
தனெமனித ஒழுக்கம் இல்லாதவரை எதுவுமே மாறாது... குடிக்குறவங்க ஓட்டுற வண்டியால அவங்களுக்கு மட்டுமில்லை.. சாலையில் வரும் பல அப்பாவிகளின் குடும்பத்திற்கு எமனாக ஆகிவிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒருசான்று...😪😪😡😡
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உயிருக்கு உலை வைப்பது மட்டுமின்றி, பிறரது உயிர் மற்றும் சொத்துக்களையும் அழிக்கும் கொடிய செயலாகும். இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்...🙏🙏🙏
குடி குடிக்குறவன் குடியைக் கொடுக்கும் அப்படிங்குற காலம் போயி... அடுத்தழன் குடம்பத்தையும் கெடுக்கும்ங்குற காலத்துல வந்து நிக்குது... 😪😪
#kamudhi #madurai #tenkasi #rain #tuticorin #naturelovers #thiruchendur #awareness #socialwork #drunkdrivingawareness #TamilnaduNews #nagercoil #tirunelveli #kamuthi

Comments
Post a Comment