பிரதமர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு

 



பிரதமர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு:


மதுரை:


மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற்

கொண்டனர்.

 பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தருகிறார்.

 மதுரை வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

 இந்த நிலையில் பாரத பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அவரது சிறப்பு பாதுகாப்பு படையினர் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மதுரை விமான நிலையம், விமான நிலையம் அருகே அரசு நிகழ்ச்சி நடைபெறும் பகுதி

 அதனைத் தொடர்ந்து , பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

 பிரதமர் வந்து செல்லும் பகுதியில், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பகுதிகளில் பாதுகாப்பு அளிப்பது, எந்த வழித்தடத்தில் செல்வது சிசிடிவி கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.


 நன்றி தமிழ் ரிப்போர்ட்டர் 

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்