மனிதநேயத்துடன் உயிரை பணயம் வைத்த இந்தியர்
ருமேனியா நாட்டில் கட்டிட வேலைக்காக சென்ற விபின் குமார் என்ற இந்தியருக்கு, ருமேனியா குடியுரிமை வழங்கி சிறப்பித்திருக்கிறது அந்த நாட்டு அரசு.
ருமேனியாவில் பனிப்பொழிவுக்காலம் என்பதால் ஏரிகள் அனைத்தும் உறைந்து காணப்படும். அப்படிப்பட்ட ஒரு ஏரியில் இறங்கிய சிறுமி ஒருவர், பனிக்கட்டி உடைந்து நீருக்குள் விழுந்து விட்டார். அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விபின் குமார் சிறிதும் யோசிக்கலாம் சிறுமியை காப்பாற்ற களம் இறங்கினார்.
பனிக்கட்டிகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்ற ஆபத்து இருந்ததால், கரையிலிருந்து ஊர்ந்து கொண்டே சிறுமி அருகில் சென்று சேர்ந்தார். ஆனால் விபின் குமாரின் எடையை தாங்காமல் பனிக்கட்டிகள் உடைந்து விபின்குமாரும் நீருக்குள் விழுந்தார். ஆனாலும் மனம் தளராமல் சிறுமியை தன் மீது ஏற்றிக்கொண்டு மீட்புக்குழுவினர் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல், கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் 20 நிமிடத்துக்கு மேல் குளிர்ந்த நீரில் சிறுமியுடன் காத்திருந்தார் விபின். மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபின் குமாரின் வீரத்தையும், மனிதநேயத்தையும் பாராட்டிய அந்நாட்டு அரசு, அவருக்கு ருமேனியாவின் கௌரவ குடிமகன் என்ற பட்டத்தை வழங்கியது.
ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த விபின் குமாரை உலகமே பாராட்டுகிறது.
#indian #rumania

Comments
Post a Comment