மினி பேருந்து ஆட்டோ விபத்து இருவர் பலி
மினி பேருந்தும் லோடுஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி! 5 படுகாயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கம்பிளி கிராமம் விந்தன் கோட்டை விளக்கிற்கு கீழ்ப்புறம் சுரண்டை சாலையில் கார், லோடு ஆட்டோ, மினி பேருந்து, விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர், விவசாயி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்
இலத்தூர் அருகே சீவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாதவன் வயது (39) இவர் லோடு ஆட்டோ ஓட்டுகிறார் மாலை 6 மணி அளவில் இலத்தூர் சங்கர் தெருவை சேர்ந்த தங்கையா தேவர் மகன் அண்ணாமலை வயது ( 65 ) ஆகியோர் வயலில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் சுரண்டை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கம்பிளிக்கு கிழக்கே விந்தக்கோட்டை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அதே வழியாக சுரண்டையை நோக்கி சென்ற கார் லோடு ஆட்டோவின் மீது பின்னால் மோதியது இதில் ஆட்டோ நிலை தடுமாறி சென்றது அப்பொழுது சுரண்டையில் இருந்து எதிரே ஆய்க்குடி நோக்கி வந்த மினி பேருந்தும் ஆட்டோ மீது மோதியது இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மாதவன் காய்கறியை ஏற்றி வந்த விவசாயி அண்ணாமலை இருவரும் உடல் நசுங்கி ஆட்டோக்கு உள்ளையே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர் சம்பவம் இடத்திற்கு ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ஆட்டோவை உடைத்து இருவரையும் மீட்டனர் இருப்பினும் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்
பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட கம்பிளி ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்த செல்வி வயது 40 பார்வதி வயது 65 திருமலை குமார் வயது 70 கருப்பாயி வயது 70 ஆறுமுகம் வயது 56 ஆகிய ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் இவர்கள் அனைவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் டிஎஸ்பி அதியமான் ஆகியோர் நேரில் வந்து விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார் இது குறித்து ஆய்க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சுரண்டை -ஆய்க்குடி கனிமவள லாரிகள் கார்கள் ஆட்டோக்கள் மின்னல் வேகத்தில் விதிமுறைகளை மீறி ஓட்டுகின்றனர். மேலும் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment