எதிர் கருத்துக்களை சந்திக்க துணிவில்லாத திருமுருகன் காந்தி

 


சென்னையில் பிரஸ் கிளப்பில் திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எல்லா பத்திரிகையாளர்களும் வந்திருந்த போது ஜனனம் தொலைக்காட்சியின் பத்திக்கையாளர்களை மட்டும் மைக்கை எடுக்க சொல்லி உங்கள் ஊடகம் மட்டும் தேவையில்லை என்று சொல்லி அவர் பேசிய காணொளி வைரலாகி வரும் சூழ்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கங்களுமே அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 தொடர்ந்து பொய்களையே பேசி வரும் திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே எதிர் கருத்துக்களை சந்திக்க துணிவில்லாத ஒரு பேடி என்பதை நிரூபித்துள்ளதாக எதிர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சில ஆண்டுகளுக்கு முன்பு அரசின் நியாய விலை கடைகள் மூடப்படும் என்பது போன்ற பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு அளித்தவர் தான் இந்த திருமுருகன் காந்தி.



 தற்போது ஜனனம் ஊடகத்தை ஆர் எஸ் எஸ் ஊடகம் என்றும் அது இருக்கக் கூடாது என்றும் அவர் கூறிவரும் சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இதே போல் ஒரு திரு எச் ராஜா அவர்களோ, அண்ணாமலை அவர்களோ அல்லது வேறு எந்த வலதுசாரி தலைவர்களை கலைஞர் டிவி சன் டிவி போன்ற நாத்திக கருத்துக்களையும் வலது சாரி எதிர்ப்பு கருத்துக்களையும் தொடர்ந்து ஒளிபரப்பு வரும் இவர்கள் தேவையில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

 அது முதல் அனைத்து ஊடகங்களும் அவர்களைப் பற்றியும் ஊடக சுந்தரம் பற்றியும் பெரிய பாடம் நடத்தி இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் விவாத நிகழ்ச்சிகளில் இதுவே முக்கிய விவாதமாக இருந்திருக்கும்.

 வலது சாரி ஆதரவாளர்கள் அனைவரும் எல்லா தொலைக்காட்சி ஊடகங்கள் பத்திரிகைகள் மற்றும் எதிர்க் கருத்துக் கொண்டவர்கள் என அனைவரையும் எதிர்கொண்ட அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கும்பொழுது இந்த நாத்திக கும்பலுக்கு தங்களுக்கு எதிரான கருத்துக்களையும் கேள்விகளையும் அவர்கள் கொடுக்கும் தரமான பதிலையும் கேட்கத் துப்பும் திராணியும் இல்லை என வலது சாரி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 உண்மையிலேயே தற்போது நாத்திக திக திமுக போன்றவர்கள் உதயநிதி கனிமொழி உட்பட பலரும் ஊடகத்துறையினரை பார்த்து பயந்து ஓடி ஒளிந்து வருவது பல இடங்களிலும் கண்கூடாக பார்த்தது. அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கும் நபர் தான் இந்த திருமுருகன் காந்தி என வலதுசாரி ஆதரவாளர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?