சமூக அக்கறை இல்லாதவரா? நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் பலரும் கதாநாயகனாக நடித்து வந்தாலும் வெகு சிலரே மக்களின் அபிமான கதாநாயகர்களாக அறியப்படுகின்றனர்.
 அவ்வாறு தமிழ் சினிமாவில் பெரிதாக ரசிகர் கூட்டத்தைக் கொண்ட பலர் இருந்தாலும் அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்.




 இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் தலைமுறைகளை தாண்டி சூப்பர் ஸ்டாராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். தமிழகத்தில் இவர் கூறிய கருத்துகளால் கடந்த காலங்களில் அரசியல் மாற்றமே உருவாகியுள்ளது. இவர் அரசியலில் வந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று ஒரு தரப்பு மக்களால் நம்பப்பட்டது. அவர் மீது மக்களுக்கு அப்படி ஒரு அபிமானம் இருந்து வருகிறது. 
 ஆனால் அவர் தனக்கு அரசியல் சரிவராது என்பதும் அரசியலில் பல நேர்மை மற்ற வேலைகளும் குள்ளநரித்தனங்களும் செய்ய வேண்டியது இருக்கும் என்பதும் அதுமட்டுமல்லாது தன்னை கவிழ்க்க மிகப்பெரிய சாதிகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து பல அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார். அதில் பலரும் ரஜினி பயந்துவிட்டதாகவும் கோழை என்பது போலவும் செய்திகள் வெளியிட்டனர். ஆனால் அவர் செய்தது சரி என தற்போது நடைபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் சம்பவம் நிரூபித்துள்ளது. அரசியல் செய்வது என்பது சிக்கலானது. நடிகர் பின்னால் சுற்றும் பல ரசிகர்களுக்கும் அரசியல் புரிதல் என்பது சுத்தமாக இருக்காது.

 அவ்வாறு பல சமயங்களில் தெளிவாக சிந்தித்து முடிவெடுத்த திரு ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நடித்து வரும் படங்கள் பலவற்றிலும் அதிகபட்ச வன்முறை காட்சிகள் மற்றும் சமூக பொறுப்பில்லாத ரசிகர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடத்தி வரும் கதாபாத்திரங்களை பார்த்த பல ரசிகர்கள் அதேபோன்று நிஜ வாழ்க்கையில் பலர் ரவுடிகளாகவும்  சமூகவிரோதிகளாகவும்  தங்களை தாங்களே உருவாகி வருகின்றன.



 அதுமட்டுமல்லாது முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கூட தான் பேசுவது பலரை பாதிக்கும் என்று தெரிந்தும் தேவையில்லாத இவரும் இவர் கூட்டாளிகளும் சேர்ந்து நடத்திய பொது மேடையில் தெரிவித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.
 ஒரு பொறுப்புள்ள உச்ச பச்ச நடிகர் இதுபோன்ற நடந்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல. எனவே இனியாவது அவர் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?