ஹிந்தி திரை உலகுக்கு பாடம் புகட்டிய கார்த்திகேயா-2
ஹிந்தி திரை உலகுக்கு பாடம் புகட்டிய கார் த்திகேயா-2
இந்து மத உணர்வுகளை கிண்டல் செய்தும் இந்தியாவுக்கு எதிராக குற்றம் கூறுவதையும் வாடிக்கையாக கொ ண் ட பா லிவுட் நடிகர் அமீர்கானுக்கு பாடம் புகட்ட விரும்பிய வலதுசாரிகள் சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தாவை புறக்கணிக்கும் படி #Boycott_Laal_Singh_Chaddha என்று சமூக வலை தளங்களில் கோரிக்கை வைத்தார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. லால்சிங் சத்தா படுதோல்வி அடைந்தது
அமீர்கான் திரைப்பட வரலாற்றில் படுதோல்வி அடைந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் லால் சிங் சத்தாவையே கூற வேண்டும் என்கிற அளவிற்கு லால் சிங் சத்தா படுதோல்வி படமாகி விட்டது.
பாலிவுட்டை தங்களின் பாக்கெட்டில்
வைத்துக் கொண்டு இந்துக்களின் உணர்வுகளை கிண்டல் செய்து வந்த
கான் நடிகர்களின் கரங்களில் .இருந்து பாலிவுட் விலகி இந்து மதம் மற்று ம் தேசியம் பேசும் வழிகளில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது என்பதற்கு ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற சினிமாக்களின் வெற்றியை உதாரணமாக கூறலாம்.
இதை விட முக்கியமானது என்னவென்றால் தெலுங்கில் இருந்து இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் 13ஆம் தேதி வெளி ஆன கார்த்திகேயா-2வின் வெற்றியை பார்த்து பாலிவுட்
மிரண்டு நிற்கிறது. தெலுங்கு பட
உலகின் ஒரு சாதாரண டைரக்டரான
சந்து மொண்டேட்டி டைரக்சனில் நிகில் சித்தார்த் என்கிற ஒரு சராசரியான
ஹீரோவை வைத்து பாலிவுட்டை மிரட்டி விட்டது டோலிவுட்.
அமீர்கானின் லால்சிங் சத்தா அக்சய்குமாரின் ரக்சா பந்தன் படமெல்லாம் தியேட்டரில் காத்தாட கார்ர்திகேயா-2 மக்களின் ஆரவாரத்துடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. டைரக்டர் சந்து மொண்டேட்டி ஏற்கனவே 2014 ல் கார்த்திகேயா என்கிற பெயரில் ஒரு தெலுங்கு படத்தை ஒரு கோயிலை முன் வைத்து படம் இயக்கி வெற்றி பெற்றவர் என்பதால் கார்த்திகேயா-2 வை பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார்.
கார்த்திகேயாவின் வெற்றி மாடர்ன் சினிமாக்களை ஓரம் கட்டி விட்டு இந்து மதத்தின் புராண கால நம்பிக்கைகளை முன் வைத்து இனி பல சினிமாக்கள் உருவாக வழி வகுத்து இருக்கிறது. அந்த அளவிற்கு கார்த்திகேயா-2வை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் சந்து மோண்டேட்
இப்பொழுது உள்ள காலத்திற்கும் பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்திற்கும் ஒரு தொடர்பை உருவாக்கி பகவான் கிருஷ்ணா வாழ்ந்து மறைந்த துவாரகா, கோவர்த்தனமலை என்று கதையை பயணிக்க வைத்து இன்றைய விஞ்ஞானத்தை விட கிருஷ்ணர் கால அறிவியல் உயர்ந்தது என்று கூறி நம்முடைய புராணங்கள் மெய்யானவை என்று இன்றைய தலைமுறையும் அறிய வைத்து இருக்கிறார் டைரக்டர்.
கன்னித்தீவு மாதிரி மாயாஜால கதை தான் ஆனால் அதை படமாக்கிய விதம் தான் கார்த்திகேயா 2 வை மாபெரு ம் வெற்றியை பெற வைத்து இருக்கிறது
அமீர்கான் சல்மான்கான் போன்றவர்களை வாழ்வின் நாயகர்களாக வழிபட்டு வந்த வட இந்திய மாநில இளைஞர்களை மனம் மாற்றி அவர்களை இந்தியாவின் புராண வரலாற்றை நோக்கி திசை திருப்பியதற்காகவே கார்த்திகேயாவை வட இந்தியாவில் உள்ள மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Comments
Post a Comment