துரந்தர் - திரை விமர்சனம்
"DHURANDAR",
பாகிஸ்தான் கராச்சியின் இரண்டு ரவுடி கும்பல் ,. ISI இந்தியாவில் செய்ய நினைக்கும் அத்துனை நாசவேலைக்கும் இந்த கும்பலை எப்படி பயன்படுத்தியது , நமது spy கள் இவர்களுள்
ஊடுருவி ஒவ்வொரு information யையும் நமது அரசாங்கத்துக்கு தெரிவித்தும் , தடுக்க முடியாமல் போன பல தாக்குதல்கள் .. இது தான் கதை ... இல்லை இது கதை இல்லை நடந்த ஒவ்வொன்றையும் பற்றிய action replay .
முதல் காட்சியே கத்தார் விமானக் கடத்தல் . கடத்தல்காரர்களுடன் நேரடி பேச்சு வார்த்தையில் 'அஜித் தோவல்' .
அஜித் தோவலாக மாதவன் . அப்படியே அச்சு அசலாக அஜித் தோவலே ..
விமானத்தினுள் நுழையும் போதே தீவிரவாதிகள் ஒருவனைக் கொன்ற ரத்தக்கறை, paasanger களின் கிலி படர்ந்த முகம் . மூன்று தீவிரவாதிகளையும் ரொக்க பணத்தையும் அவர்களிடம் ஒப்படைக்க போகும் வலி என மாதவன் படம் முழுவதும் Rocks ...
பாகிஸ்தானின் கராச்சி ...
ரவுடியிஸத்தின் உச்சக்கட்ட காலகட்டம் .
அந்த கேங்கில் போய் சேர்வதற்கு இந்திய ராணுவத்தை சேர்ந்த ரன்வீர் சிங் ஒரு பலூச்சாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த கேங்கில் சேர்கிறான் . வில்லனின் நம்பிக்கை பாத்திரமாகி செய்திகளை சேகரிக்கிறார் . மந்திரியின் மகளை மணந்து மந்திரியை தன் வலையில் விழ வைக்கிறான் . உளவாளிக்கான alertness அமைதி , ன்னு கதாபாத்திரத்திற்கான பாந்தமான நடிப்பு .
அந்த கேங்கின் தலைவனாக 'ரஹ்மான் டகைத்' ஆக அக்ஷய் கண்ணா ... நடிப்பு ராக்ஷஸன் .
பாகிஸ்தானிற்கு பணத்திற்கு பஞ்சமே இல்லாது இருந்த கால கட்டம் . இந்திய பணத்தை கள்ள நோட்டு அடிக்க நமது மந்திரிகளே மறைமுகமாக உதவியதும் , அதை இந்திய சந்தையில் அவற்றை பரவவிட்டது என இந்த உண்மை தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத கையறுநிலயில் நமது உளவுத்துறை .
விமானக்கடத்தல் , பார்லிமெண்ட் தாக்குதல் , நவம்பர் பாம்பே தாக்குதல் எல்லாமே அங்கிருந்து நமக்கு உளவு கிடைத்தும் தகுந்த பதிலடி கொடுக்க முடியாத பலவீனமான அரசாங்கம் .
உளவுத்துறை என்ன செய்கிறது ? Inteligence failure என்று எதோ சர்வசாதாரணமாக கேட்பவர்களின் கவனத்திற்கு ....
ஒவ்வொரு spy ம் அங்கு தனது உயிரை தனது வலியை மதிப்பு மரியாதையை அத்தனையும் ஒதுக்கி இந்த நாட்டிற்காக அங்கு வேலை செய்வதை என்றாவது நாம் நினைத்து பார்த்திருக்கின்றோமா ?
அந்த படத்தில் ஒரு இந்திய உளவாளி சொல்வார்
' ஆறு வருடம் நான் ரோட்டில் குப்பை தொட்டிக்கு அருகில் படுத்திருந்திருக்கின்றேன்' என .
ஒரு உளவாளியை அடையாளம் கண்டதும் அவனை துன்புறுத்தும் காட்சி .. ஐய்யோ ... ஒரு நிமிடம் உடலினுள் வரும் நடுக்கும் ... Major Mohit Sharma வின் தாய் இப்படி தான் தன் மகன் கொல்லப்பட்டான் என்பதை பார்தால் அவள் அந்த நொடியே இறந்து விடுவாள் . அத்தனை கொடூரமாக அவனை கொன்றிருக்கிறார்கள் .
மறக்க முடியாத இரண்டு வசனங்கள்
" இந்துக்கள் மிகவும் கோழைகள்"
"வெளியிலிருந்து வரும் ஆபத்துக்களை கூட நாம் சமாளித்து விடலாம் , ஆனால் நம் மக்களே நம்முடன் இல்லாமல் இருப்பது நமக்கும் நமது தேசத்திற்கும் எதிராக செயல்படுவது தான் நம் தலைவிதி .
உண்மையான வார்த்தைகள் .
படத்தின் வரும் ஒவ்வொரு கேரக்டரும் நிஜம் . சம்பவங்கள் நிஜம் . நமது ஒரே எதிரி பாகிஸ்தான் தான் என்பதை எந்த பூசி முழுகலும் இல்லாமல் சொன்ன படம் .
3.30 மணி நேரப் படம் .
ஆனால் தியேட்டரில் ஒருவர் கூட எழுந்து போகவில்லை . House full ஆக ஓடுகிறது .
Gen Z க்கள் இரண்டு முன்று முறை பார்க்க வருகின்றனர் .
To be continued ன்னு முடியுது
Part 2 கூடிய விரைவில் ஆம்
Demonization அப்பறம் பாகிஸ்தான் செல்லா காசு ஆனது , அதை பிச்சை எடுக்க வைச்சது இந்த khan ங்களின் கொட்டம் அடங்கினது ன்னு இன்னும் நிறைய special items இருக்குப்பா ...
நன்றி. திருமதி Vijaya KR ...




Comments
Post a Comment