திரையரங்குகளில் இன்றைய பரிதாப சூழ்நிலை
மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் சினிமா உடன் ஒன்றி போய் உள்ளதால் தான் தங்களை ஆட்சி செய்யும் பொறுப்பை கூட நடிகர்களுக்கு அளித்தார்கள்.
வரலாற்றுத் திரைப்படம், விடுதலை போராட்டங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள், திரில்லர் படங்கள், குடும்ப படங்கள் மற்றும் பக்தி படங்கள் என பலதரப்பட்ட சினிமாக்களை வெற்றிகரமாக திரையிட்ட தமிழ் திரை உலகம் தற்போது மோசமான நிலையில் தள்ளாடி வருகிறது.
இந்திய திரைத்துறையிலே தற்போது வருகின்ற படங்களில் பெரிதாக மக்களை கவரும் வகையில் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
இதனால் திரையரங்குகளில் முன்பு போன்று குடும்பங்களாகவும் நண்பர்கள் சேர்ந்து பெரிய குழுக்களாக திரைப்படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. தற்போது வரும் ரத்த வெள்ளத்தில் அடிக்கடி வெட்டு குத்து துப்பாக்கிச் சண்டையுடன் உள்ள படங்களை பார்த்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாக உள்ளது.
அது மட்டுமல்லாது திரையரங்குகளை நவீனப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பல அதிநவீன வசதிகளும் குளிர்சாதன வசதி போன்றவற்றை வைத்து திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். அதுமட்டுமல்லாமல் திரையரங்குகளில் கேண்டின்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை அநியாயக் கொள்ளையாக உள்ளது.
இதனால் சாமானிய மக்களில் ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க வேண்டும் என்றால் சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவதை குறைத்துக் கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியால் OTT, youtube போன்ற பல்வேறு தளங்களில் வீட்டிலிருந்தபடியே திரைப்படங்களைக் கண்டு மகிழ முடிகிறது.
இதனால் பெரும்பான்மை மக்கள் தியேட்டருக்கு செல்வதையே தவிர்த்து விடுகின்றனர்.
மீண்டும் தியேட்டர்கள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் எனில் தியேட்டர்கள் கட்டணம் பார்க்கிங் கட்டணம் என அனைத்தும் நியாயமாக ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டு நல்ல திரைப்படங்களை திரையிடுவதோடு தியேட்டர் கேண்டின்களின் கொள்ளை தடுக்கப்பட்டு உணவு பண்டங்களின் விலையும் சரியான முறையில் நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் திரையரங்குகள் புத்துணர்ச்சி பெறும்.
இல்லையென்றால் திரையரங்குகளில் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.


Comments
Post a Comment