திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?
தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.
அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.
அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.
தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.
தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்கிறது. ஆனால் தற்போது இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் அது வேண்டாம் என்று எதிர்க்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு தன்னுடைய சாதனையாக சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லாத போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையில் எப்படியாவது திசை திருப்பி மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி தங்கள் தவறுகளை மறைத்து மக்களை மடை மற்றி ஓட்டுக்களை பெற்று விட வேண்டும் என்பதே திமுகவின் ஒட்டுமொத்த அரசியல் கொள்கையாக உள்ளது.
தற்போதுள்ள தமிழக நிதி நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உருவாகலாம்.


Comments
Post a Comment