தமிழ்நாட்டில் தவறான வியூகங்களால் தடுமாறுகிறதா பாஜக?


தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசித்து செயல்படுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக சம்பவத்திற்கு பின் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசி எப்படியாவது அவரை கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் அது இதுவரை கை கூடவில்லை. அது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு பிரிவினருக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது.
 மேலும் திரு அண்ணாமலை அவர்களை தலைமைப் பதவியிலிருந்து மாற்றிய பின்பு அவருக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 



 தற்போது பாரதி ஜனதா கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வரும் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வதோடு கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் என்ற போதிலும் திரு அண்ணாமலை அவர்கள் இருந்த போது தமிழகத்தில் பாஜகவை எப்போதும் ஒரு பேசும் பொருளாகவே வைத்திருந்தது போல் செய்ய முடியவில்லை என்பதும் ஒரு சிலரின் கருத்தாக உள்ளது.

 அதுமட்டுமல்ல அது பாரதி ஜனதா கட்சியிலேயே பல இடங்களில் உட்கட்சி பூசல்கள் இருப்பது போன்ற தோற்றங்களும் உள்ளன. மேல்மட்ட தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை இந்த உட்கட்சி கோஷல்கள் பனிப்போர் போன்று நடந்து வருகின்றன.
 இது போன்ற காரணங்களால் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஒரு தடுமாற்றமான சூழ்நிலையில் இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது என்று அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர்.
 எனவே இதை அகில இந்திய தலைமை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய காரியங்களை துரிதப்படுத்தி வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?