Posts

Showing posts with the label #டிஜிட்டலனேவ்ஸ்ப்போர்ட்டால்

தமிழ்நாட்டில் தவறான வியூகங்களால் தடுமாறுகிறதா பாஜக?

Image
தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசித்து செயல்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக சம்பவத்திற்கு பின் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசி எப்படியாவது அவரை கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் அது இதுவரை கை கூடவில்லை. அது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு பிரிவினருக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது.  மேலும் திரு அண்ணாமலை அவர்களை தலைமைப் பதவியிலிருந்து மாற்றிய பின்பு அவருக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.   தற்போது பாரதி ஜனதா கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வரும் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வதோடு கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் என்ற போதில...