அகங்கார யுத்தத்தின் முடிவு எட்டு உயிர்கள்

 



தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் நடைபெற்ற இரு தனியார் பேருந்துகளின் விபத்து காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

 அந்தக் காணொளியை பார்க்கும் பொழுது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த பேருந்து ஒன்று முன்னாள் சென்று கொண்டிருக்கிறது. அதனை தனியார் பேருந்து ஓட்டுநர் முந்த முயற்சிக்கிறார். பலமுறை முயன்றும் அந்த விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுநர் வழி கொடுக்காத நிலையில் எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுனர் அகங்காரமும் (Ego) அவரை முந்தவிடக் கூடாது என்று விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டினரின் அகங்காரமும்(ego) இன்று எட்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது.

 நமது இந்தியர்களுக்கு பொதுவாகவே சகிப்புத்தன்மை மிக குறைவாக உள்ளது. சாலைகளிலும் பொது இடங்களிலும் முன் பின் தெரியாத நபர்களிடம் போட்டி பொறாமை மனப்பான்மையுடன் அகங்காரத்துடனும் பலரும் நடந்து கொண்டிருக்கின்றனர்.இது மாற வேண்டும்.

 நாம் விட்டுக் கொடுத்து செல்வதால் எந்த விதத்திலும் கெட்டுப் போகப் போவதில்லை. மேலும் மனிதத் தன்மையுடனும் சகிப்புத்தன்மையுடன் நடப்பதால் நமது மதிப்பு உயரும். தற்போதைய சூழ்நிலையில் இந்திய சினிமா, தொலைக்காட்சி சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் என அனைத்திலும் மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்திலும் நான் என்ற அகங்காரத்தை தூண்டுவது போன்றுமே காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் அடுத்த தலைமுறை அனைவருமே சகிப்புத்தன்மையும் மனிதாபிமானம் அற்றவர்கள் ஆகவும் ஒருவருக்கொருவர் ஈகோ யுத்தத்தில் அழித்துக் கொள்பவர்களாகவுமே உருவெடுப்பார்கள்.

 எனவே நம் வீட்டுக் குழந்தைகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் செல்லும் பொழுது மற்றவர் அகங்காரத்துடனும் சகிப்புத்தன்மையற்றும் நடந்து கொண்டாலும் நாம் பொறுமையாகவும் சாந்தமாகவும் நடந்து கொள்வது எப்படி? என்றும் விட்டுக்கொடுத்து செல்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துச் சொல்லி வளர்த்தால் மட்டுமே அடுத்த தலைமுறை ஒழுக்கமும் நல்ல வாழ்வியல் முறையும் கொண்டதாக இருக்கும். இது நம் இந்திய பெற்றோர்களின் கையிலேயே உள்ளது என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு நடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?