திமுக அரசில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்?


 நம் தமிழ்நாடு சுதந்திரம் வாங்கியதும் விடுதலை பல நல்ல தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.

 குறிப்பாக காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மை செய்ய பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாது பல புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசின் சலுகையுடன்  பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. 

 அதன் பின்பு வந்த பல ஆட்சியாளர்களும் தமிழகத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் மாநிலமாகவே சிறந்த நிர்வாகத்தை செய்து கொண்டிருந்தனர்.

 ஆனால் தற்போது சில நாட்களாக திமுக தலைமையின் கீழ் நடைபெற்று வரும் பல நிர்வாக குறைபாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 முதலாவதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அவர்கள் மக்களை தூண்டிவிட்டு கையாண்ட விதத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டதோடு அங்கு பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் தற்பொழுது அப்பகுதி மக்கள் அந்நிறுவனம் மூடப்பட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் தூத்துக்குடி பகுதி வளர்ச்சி தடைப்பட்டுள்ளதையும் வேலை வாய்ப்பு குறைந்துள்ளதையும் புரிந்துகொண்டு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

 இதுபோன்று கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிராக பொய்யான செய்திகளை பரப்பி போராடியதன் விளைவு என்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் எங்கு சென்றாலும் புதிய முதலீடுகளையோ புதிய நிறுவனங்களையோ அவர்களால் அழைத்து வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைக்க முடியவில்லை. இதனால் தமிழ்நாடு தற்போது ஒரு சிறிய தேக்க நிலைக்கு சென்று விட்டது. இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி பின் தங்கிவிடும்.

 முதலீட்டாளர்கள் இடையே திமுக ஆட்சியில் இருக்கும் போது முதலீடு செய்தால் எதிர்க்கட்சியான பின் எங்கே வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டது போல் தங்கள் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டால் என்ன செய்வது என்ற பயத்துடனே தமிழகம் வர மறுக்கின்றனர் என்று பொருளாதார வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.



 திமுக ஆட்சி நிர்வாகத்தில் தொழில் துறை அமைச்சர் திரு  தொழில் துறை அமைச்சர் திரு ராஜா அவர்கள் TRP ராஜா அவர்கள் பாகிஸ்தான் நிறுவனத்தில் இருந்து 15 ஆயிரம் கோடி முதலீடு வந்ததாக கூறி அதனை முதல்வரும் தெரிவித்து பின்னர் அது தவறு என்பதும் பொய்யான செய்தி என்பதும் அந்நிறுவனத்தின் மூலம் விளக்கப்பட்டது.

 ஆட்சியாளர்கள் தங்கள் அரசில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இது போன்ற தகவல்களை தெரிவித்தால் சாமானிய மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை எப்படி வரும்.

 அடுத்ததாக கரூர் சம்பவத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கி செந்தில் பாலாஜி காவல்துறையினர் என அனைவரும் ஆளுக்கு ஒரு முன்னுக்குப் பின் முரணாக கொடுத்து வருகின்றனர். ஒரு அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அரசுக் குறிப்பில் உள்ள ஆவணத்தில் இருந்து வழங்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது எப்படி ஒவ்வொருவரும் ஒரே தகவலை வெவ்வேறு புள்ளி விவரங்களுடன் எப்படி தெரிவிக்க முடியும்? என்பது அனைத்து அரசியல் கட்சியினரின் கேள்வியாக உள்ளது.

 இதனால் மக்கள் அனைவரும் குழப்பத்தோடு உள்ளதோடு திமுக அரசு நிர்வாக திறமை ஏற்ற அரசு என்று தெரிவித்து வருகின்றனர்.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?