தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

 


தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

 முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார்த்து அவர்கள் செய்த செயல்கள் குறித்து உங்கள் மனதுக்குள் அவர்களுக்கு என்ன மதிப்பெண் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.



 அதேபோல் புதிதாக வரும் வேட்பாளர்கள் உங்கள் தொகுதியை மேம்படுத்த என்ன மாதிரியான செயல் திட்டங்கள் வைத்துள்ளார்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சி என்ன மாதிரியான தேர்தல் அறிக்கைகள் கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பு கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் என அனைத்து வகைகளிலும் அவர்களது தொலைநோக்கு திட்டம் என்ன என்பதை கண்டறிந்து அதில் எந்த வேட்பாளர் கொடுத்துள்ள மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகள் சரியாக உள்ளது நிறைவேற்ற சாதகமாக உள்ளது என்பதைத் தெரிந்து அதன் பின் வாக்களித்தால் நமது தமிழகம் மற்றும் உங்கள் தொகுதி இரண்டும் வளமாக இருக்கும். 

 அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்கள் என்ற வாக்குறுதிகளையை நம்பியும் அவர்கள் கொடுக்கும் பணத்தை நம்பியும் வாக்களித்தீர்கள் என்றால் வரும் ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாகும். அதுமட்டுமல்லாமல் விலைவாசி பன்மடங்கு உயரும். பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோகும் ஆபத்துகளும் உள்ளது. ஏனெனில் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாக பல வேலைகளை மென்பொருட்கள் உதவியுடனும் இயந்திரங்கள் உதவியுடன் செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதால் திறமையான ஆட்சியாளர்களால் மட்டுமே இனி மக்களை காப்பாற்ற முடியும் என்பது நிதர்சனம்.

 இதையெல்லாம் மனதில் வைத்து கணக்கு போட்டு உங்கள் தொகுதிக்கு சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?