திராவிட மாடல் vs தேசிய மாடல்



 நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது.

 இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.

 திராவிட மாடல் 

 ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே என ஒரு பிரிவினருக்கு மட்டும் கொடுத்து பெயரளவில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.

 தொழில்துறை முதலீடு பெற வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று பல கோடிகளை செலவு செய்து சுற்றியும் பலனில்லாமல் வந்த சில முதலீடுகளும் வேறு மாநிலங்களுக்குச் செல்கிறது.

 மேலும் மாதம் தோறும் மின் கட்டணம், நீட் விலக்கு, பெட்ரோல் கேஸ் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், கல்விக் கடன் தள்ளுபடி  போன்ற பல வாக்குறுதிகளும் நிறைவேற்ற முடியவில்லை.

 அதுமட்டுமில்லாமல் பால் பால் பொருட்கள் விலை உயராது, சொத்து வரி உயர்வு எடுக்காது என்பது போன்ற வாக்குறுதிகளையும் காற்றில் பறக்க விட்டு அனைத்தும் உயர்த்தப்பட்டு விட்டது.

 


தேசிய மாடல்

 நாட்டின் பல பகுதிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர் லடாக் போன்ற பகுதிகளில் பாலங்கள் அமைக்கப்பட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு லலிதாசை சென்று வரும் வகையில் உட்கட அமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 இராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தூக்கு பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

 விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 அனைவருக்கும் குடிநீர் திட்டம் மூலம் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை பல இடங்களில் அனைவருக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

 டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. யு பி ஐ பண பரிவர்த்தனைகள் சாதனை படைத்துள்ளது.

 அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

 இராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா பெரும் வளர்ச்சி  கண்டுள்ளது.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?