தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு அண்ணாமலை அவர்களின் நிலை என்ன?

 


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கூட்டணிகளை வலு சேர்க்கும் விதத்திலும் மக்களிடம் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட தொடங்கி விட்டனர்.

 இந்நிலையில் பெரும்பாலான கட்சிகளில் ஒரு கட்சி அரசியலும் சூடு பிடித்துள்ளது.

 தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளாக உள்ள அதிமுக பாஜக இரு கட்சிகளிலும்  உட்கட்சி பிரச்சனைகளும் அதிகார போட்டியும் மேலோங்கி உள்ளது.

 அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு வைத்த முதல் நிபந்தனையாக கூறப்படுவது திரு அண்ணாமலை அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது.

 ஏனெனில் அண்ணாமலை தமிழக பாஜகவை பெருமளவில் வளர்ச்சி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தற்போது அரசியலில் பாஜகவின் முகமாக அனைவராலும் அறியப்படுபவர் திரு அண்ணாமலை அவர்கள். இதுபோன்று மாற்றுக் கட்சியில் ஒரு தலைவர் உருவானால் அது பின்னாலே நமக்கு பிரச்சனையாக முடியும் என்று யோசித்ததாலே இது போன்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 அதிமுக போன்ற வேறு கட்சியில் இருப்பவர்கள் அண்ணாமலை பார்த்து பயப்படுவது நியாயம். ஆனால் பாஜகவில் இருக்கும் பல பெரிய தலைவர்கள் கூட அண்ணாமலை அவர்களின் வளர்ச்சியை கண்டு அவரை எப்படியாவது ஓரம் கட்டி விட வேண்டும் என்று எல்லாவித முயற்சிகளையும் செய்து வந்தனர். இதன் காரணமாக தற்போது அண்ணாமலை அவர்களுக்கு பாஜகவின் முன்பிருந்தது போல செல்வாக்கு இல்லாமல் தேக்க நிலையில் உள்ளார்.



 ஆனாலும் அவருக்கென்று தனியாக ஒரு பெரிய தொண்டர் கூட்டும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திரு அண்ணாமலை அவர்களின் கலைஞர் பார்வையில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு சில காலம் காத்திருந்து கூட தங்கள் பலத்தை நிரூபித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது அவரது கணக்காக இருந்தது.

 ஆனால் கட்சி மேலிடமும் மற்ற தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அவர்களது ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தமிழகத்தில் தங்களுக்கென்று ஒரு இடத்தை தக்க வைப்பது. அதற்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் பலப்படுத்துவது சரியானதாக இருக்கும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

 இதனால் திரு அண்ணாமலை அவர்களும் அவரது ஆதரவாதங்களும் சிறிது அமைதி காத்து வந்தனர். ஆனாலும் தற்போது இந்த பிரச்சனை மென்மேலும் வளர்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் திரு அண்ணாமலை அவர்கள் அணை கட்சி தொடங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சில வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 இதுபோன்ற நிலை தொடர்ந்தால் பாஜகவில் உள்ள தொண்டர்களுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இது ஒரு பின்னடைவாக இருக்கும். எனவே இது போன்ற நேரங்களில் கட்சி மேலிடம் உடனடியாக தலையிட்டு கருத்து வேறுபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பதை அனைவரின் கருத்தாக உள்ளது.

 திரு அண்ணாமலை அவர்களின் வளர்ச்சி கண்டு சொந்தக் கட்சியினர் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒருவித பயத்துடனே உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?