திமுகவை கர்மா பின் தொடர்கிறதா?
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்தி ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு பிண அரசியல் பண அரசியல் என எல்லா வகையிலும் ஆளுங்கட்சியை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்தனர்.
அப்படி எல்லா விதத்திலும் அரசியல் செய்து அதிமுகவை வில்லன் போல் சித்தரித்து நாங்கள் ஆட்சிக்கு வந்த நாட்டில் பாலாறும் தேன்ஆறும் ஓடும் என்று மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல தற்போது திமுக எதையெல்லாம் வைத்த அரசியல் செய்கிறதோ அதே போல் பிரச்சனைகள் அவர்கள் ஆட்சியிலும் நடக்கிறது. இதைத்தான் கர்மா பின் தொடர்தல் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டாக
சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் லாக்கப் மரணத்தை வைத்து பெருமளவில் பினார அரசியல் செய்தது திமுக.
அதேபோல் திமுக ஆட்சியில் அஜித்குமார் கொலை நடந்தது. ஆனால் இப்போதும் ஊடகங்களை வைத்து அதை திசை திருப்ப பல வகைகள் என்னும் திமுக அரசின் முயற்சி செய்து வருகிறது.
அடுத்ததாக
அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கனிமொழி உள்ளிட்ட திமுக பிரபலகங்கள் பெருமளவில் அரசியல் செய்தனர்.
அதேபோல் திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திமுகவை சேர்ந்த ஞானசேகரன் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்து தண்டனையும் பெற்றுள்ளான். திமுகவைப் போன்று மட்டமான அரசியல் வேறு எந்த கட்சிகளும் செய்யவில்லை.
அடுத்ததாக
நீட் விவகாரத்தில் அனிதா என்ற பெண்ணை வைத்து பெரிய அளவில அரசியல் செய்வதற்காக அப்பெண்ணை தூண்டிவிட்டு தற்கொலை செய்யும் அரசியல் செய்தது திமுக என்று திமுக உடன் பிறப்புகள் சிலரை தற்போது பேசி வருகின்றனர்.
இன்று திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகி நீட் ரத்து செய்யப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் ஆனால் அது பற்றி எந்த ஊடகம் பேசாத அளவிற்கு ஊடகத்தின் வாய்களை அடைத்துள்ளது திமுக அரசு.
தரமான கல்வி என்பது நீ எந்த கேள்வி கேட்டாலும் என்னால் பதிலளிக்க முடியும் என்று தைரியமாக சொல்வதும் எத்தனை தேர்வுகள் கொண்டு வந்தாலும் எங்களால் வெற்றி பெற முடியும் அதற்கான கல்வி திட்டம் எங்களிடம் உள்ளது என்பதும் தான். ஆனால் திமுகவை பொறுத்தவரை திராவிடம் ஆட ஆனால் திமுகவை பொறுத்தவரை திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார் பற்றிய கேள்விகளும் தங்கள் சிற்றரசன் உதயநிதி பற்றிய கேள்விகளும் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைத்து கல்வித் திட்டத்தை சீரழித்து தமிழக மாணவர்களின் மூளையை மனு அளிக்கும் பணியை செய்து வருகிறது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போதையில் மூழ்கும் தமிழகம்
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் திமுகவில் இருந்த ஜாபர் சாதிக் என்பவர் தான் போதைப் பொருட்களின் அரசனாக வாழ்ந்து வந்துள்ளார். அவர் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஒரு பெரிய சந்தையை உருவாக்கி வைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தின் மூலம் பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்ததும் திமுகவினர்தான் என்று பல youtube ஊடகங்களும் தெரிவித்தன.
பள்ளி மாணவர்கள் கூட கஞ்சா போன்ற பாதிப்புகள் உபயோகப்படுத்துவது அதிகரித்தது திமுக ஆட்சியில் தான் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அடுத்ததாக
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 உயிர்களும் போக காரணமாக இருந்தது திமுகவின் திறனற்ற நிர்வாகம் என்று இன்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அடுத்ததாக
சென்னையில் பெருமளவில் மழை பெய்து வெள்ளம் வந்த போது அதிமுக ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்று குற்றம் சாட்டி திமுக செய்த அரசியல் அனைவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது நாங்கள் நான்காயிரம் கோடி செலவு செய்து வடிகால் பணிகளை 98 சதவீதம் என அமைச்சர்கள் மேயரும் முதல்வர் உட்பட பலரும் பேசி வந்தனர். ஆனாலும் சிறு மழை பெய்தாலும் சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. அதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேலும் 1032 வருவாய் செலவில் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்று அமைச்சர்கள் மற்றும் மேயர் பதிலளித்தனர்.
ஆனாலும் இவ்வளவு செலவு செய்தும் கூட சென்னை பொருத்தவரையில் மழைநீர் வடிகால் இன்னும் சரிவர செய்து முடிக்கப்படவில்லை. பல இடங்களிலும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் பல நாட்களுக்கு தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். ஆனால் சென்னை மக்கள் தொடர்ந்து திமுகவுக்கே வாக்களிப்பதால் இது போன்ற இன்னல்கள் அவர்களுக்கு பழகி விட்டதாகவே தெரிகிறது.
இப்படி திமுக எதையெல்லாம் வைத்து அரசியல் செய்ததோ அதைவிட பல மடங்கு மேலான அவலங்கள் அவர்கள் ஆட்சியில் நடக்கிறது என்பது அவர்களது கர்ம வினை என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.



Comments
Post a Comment