தமிழகத்தில் தனித்தன்மையை இழக்கிறதா? பாஜக

 தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை வேகமாக நகர்த்தி வருகின்றன.



 இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தில் நடைபெற்ற தெரியாத சம்பவத்தை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கரூர் சம்பவத்தை வைத்து எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று கட்டம் கட்டி வருகின்றனர்.

 இதில் தமிழக பாஜக விஜய்க்கு ஆதரவாக களமாடி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொறுப்பாக வேண்டியவர்களில் விஜய்யும் ஒரு முக்கிய பொறுப்பாளியாவார். அரசு எந்த அளவுக்கு இந்த சம்பவத்திற்கு பொறுப்போ அதே அளவிற்கு விஜய்க்கும் பொறுப்புண்டு என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

 ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கும் சில பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்குமே இது போன்ற கருத்துக்களுக்கு உடன்பாடு இல்லை. அது மட்டுமல்லாமல் அண்ணாமலை தலைமையும் நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழக மந்திரந்தபோது அண்ணாமலை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.  

 இதனால் தமிழகத்தில் பாஜகவில் குட் கட்சி  பூசல்கள் இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது. 

 தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிதாக உதவியவர்களின் வேல்முருகன் தமிழிசை சௌந்தரராஜன் வரிசையில் அண்ணாமலையும் ஒரு முக்கியமான தலைவராக உள்ளார். அண்ணாமலை அவர்களுக்கு என்று தனியாக ஒரு குறிப்பிடத்தக்க இடம் உள்ளது.

 தமிழக பாஜகவை பொறுத்தவரை இதுவரை இருந்த தலைவர்களின்  இல்லாத அளவிற்கு திரு அண்ணாமலை அவர்களுக்கு ஒரு பெரிய ஆதரவாளர் கூட்டம் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

 சாமானிய மக்களின் மன நிலையும் தொண்டர்களின் மனநிலையும் ஆதரவாளர்களின் மன நிலையில் புரிந்து கொள்ளாமல் பாஜக தலைமை என்பது 2026 தேர்தலில் மனதில் கொண்டு சில அதிரடி முடிவுகளை எடுத்து அதன்படி நடந்து வருகிறது. இது சாமானிய மக்களையும் தொண்டர்களையும் சோர்வடையச் செய்யும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



 வெகுஜன மக்களின் எண்ணங்களையும் தொண்டர்களின் மன ஓட்டத்தையும் அறிந்த அதன்படி செயல்பட்டால் மட்டுமே கட்சி வளர்க்க முடியும் என்பதை தலைவர்கள் புரிந்து கொண்டு மென்மேலும் கட்சியை வளர்க்க தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதே உண்மையான பாஜக தொண்டர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?