சிங்கப்பூரின் லீ க்வான் யூ போன்று இந்தியாவிற்கு மோடியா?
சிங்கப்பூரில் மலேசியா தனி நாடாக அறிவிக்கும் போது அந்த நாட்டில் வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சிறிய நகரத்து அளவே உள்ள சிங்கப்பூர் வறுமையில் இருந்து மீண்டு இன்று உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் வளர்ந்துள்ளது.
இப்படி அந்த நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசியல் தலைவர் லீ க்வான் யூ ஆவார்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த லீ க்வான் யூ அந்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் வேலை செய்தார். நாட்டில் ஊழல்கள் இல்லாமல் அறவே ஒழித்தார்.
எந்த ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்த்தார்.
சிங்கப்பூர் நாடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையில் கீழ் சிறப்பாக முன்னேறியது. அவருடைய சிந்தனை செயல் அனைத்தும் நாட்டை முன்னேற்றுவதை பற்றிய இருந்தது.
இதனால் அவர் எதிர்த்து செயல்பட்டு வந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றரை சதவீதத்திற்கும் கீழான மக்கள் ஆதரவையே பெற முடிந்தது.
இந்தியாவில் தற்போது நரேந்திர மோடி அவர்களும் இது போன்றதொரு பாணியை பின்பற்றுவதாக அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சில நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் முதல்வராக பதவி ஏற்றது முதல் இன்று வரை அவர் முழு நேரமும் உழைத்து நாட்டை முன்னேற்ற பாதையில் கேட்டு செல்லும் நோக்கோடு செயல்பட்டு வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனால்தான் அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத்தில் முதல்வராகவும் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக இந்திய தேசத்தின் பிரதமராகவும் தொடர்ந்து பதவி வகித்து வருவதோடு இனி வரும் காலங்களிலும் அவர் தலைமையிலான அரசே அமைய அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம் ஊழல் இல்லாத அரசு முழு நேரமும் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய சிந்தனையோடு செயல்படும் தன்மை மற்றும் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சரியான பதவிகளை வழங்கி நல்ல ஒரு டீம் ஒர்க் ஆக செயல்பட்டு வருவதால் தான் திரு நரேந்திர மோடி அவர்களால் இந்த வெற்றியை பெற முடிந்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அவரின் இதுபோன்ற செயல்பாடுகளால் நாட்டில் உள்ள மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட வீழ்த்த முடியாத ஒரு வெற்றியாளராக திகழ்கிறார். அவரை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் கூட முடியாத நிலையே நிலவுகிறது. இந்நிலையில் அவரை வீழ்த்த வேண்டுமெனில் எதிரணியில் அவரை விட நன்கு உழைத்து நாட்டை முன்னேற்றம் ஒரு முழு நேர தலைவர் மற்றும் அவருடன் பணிபுரிய ஒரு நல்ல திறமை வாய்ந்த குழுவும் தேவை. அப்படி ஒரு குழு அமையும் பட்சத்தில் அவரை வீழ்த்துவது ஒன்றும் அரிதான காரியமாக இருக்காது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருப்பதாக தெரியவில்லை.
எப்படி லீ க்வான் யூ சிங்கப்பூரின் சிற்பி என்று அதே போல் இந்தியாவின் சிற்பி என்று நரேந்திர மோடி அவர்களை அழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மக்களின் கருத்த உள்ளது.


Comments
Post a Comment