தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் சரியா?

 


தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

 தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு பின் அமைதி காத்து வந்த தமிழக வெற்றி கழகத்தினர் தற்போது லேசாக வெளிவந்து மீண்டும் தங்கள் அரசியலை தொடங்கியுள்ளனர். 

 தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் புஸ்சி ஆனந்த் உட்பட பலரும் கரூர் சம்பவத்திற்கு பின் ஒளிந்து கொண்டனர். தற்போது அதன் தாக்கம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின் தங்களின் அரசியலை தொடர ஆரம்பித்துள்ளனர்.



 இந்நிலையில் அவர்கள் செய்யும் அரசியல் என்பது திமுகவின் காப்பியாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக தங்கள் அரசியலில் எப்படி முன்னெடுத்துச் செல்கிறதோ அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்தின் அரசியலும் செயல்படுகிறது.

 குறிப்பாக மத்திய அரசை காரணம் இல்லாமல் எதிர்ப்பதிலும், நீட் தேர்வு விவகாரத்திலும், சிறப்பு வாக்காளர் திருத்தத்திலும் போன்ற எல்லா பிரச்சனைகளிலும் திமுகவின் Bடீம் போல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

 இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுவதில்லை என்பதோடு தமிழக வெற்றி கழகத்தின் மாற்று அரசியல் என்ற கோஷத்தையும் சிதைப்பது போலவே உள்ளது. இதனால் மக்கள் தமிழக வெற்றி கழகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் குறைய தொடங்கியுள்ளது.

 தமிழகத்தின் ஆளும் கட்சி செய்யும் ஊழல்களையும், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நிர்வாக திறமையின்மை போன்றவற்றையெல்லாம்  பற்றி பேசாமல் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் தேவையில்லாத பிரச்சனைகளில் முக்கியத்துவம் அளித்து தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்ட அரசியல் மக்களிடம் எடுபடவில்லை என்பது அவர்களுக்கு என்று புரியும் என்பதும் தெரியவில்லை. 

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?