தமிழகம் எங்கே செல்கிறது? சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிறதா?
தமிழ்நாட்டில் தற்போது சமூக விரோத செயல்கள் பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஞானசேகரன் என்ற திமுக அனுதாபியால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையில் ஆரம்பித்து சிறுமி முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.
தற்போது கோவை மாவட்டத்தில் காரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஹிட்லராக மாறுவேன் சர்வாதிகாரமாக நின்று வசனம் பேசிவிட்டு சட்டம் ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு காப்பேன் என்று டயலாக் எல்லாம் பேசிவிட்டு தற்போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை
சமீப காலங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதோடு பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இது போன்ற ஒரு சம்பவம் அடுத்து நடுவிப்பிராத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது
போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை திமுக பாதுகாக்க நினைக்கிறது தவிர தக்க தண்டனை வாங்கி தர முன்வருவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


Comments
Post a Comment