தென்காசி சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு முடிவுகள்

    


    நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்

     பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் சார்பாக நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 தென்காசி மாவட்டத்திற்கான கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளில் முதல் தொகுதியாக தென்காசி தொகுதி முடிவு வெளியிடப்படுகிறது.


தென்காசி பகுதியில் பொறுத்த வரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பழனி நாடார் அவர்களுக்கு மக்கள் மத்தியில் சிறிய அளவில் அதிருப்திகள் உள்ளது தெரிய வருகிறது. சில இடங்களில் அவரிடமே நேரடியாக எதிர்ப்புகளை தெரிவித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

தென்காசி பெரும்பாலும் அதிமுக திமுக கட்சிகள் இருவராலும் பலமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகவே இருந்துள்ளது. 

தற்போது இந்த தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு அல்லது வேறு ஏதேனும் கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பரவலாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. பாஜக சார்பில் திரு ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் போட்டியிட தேவையான களப்பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 



அதேபோல் திமுக சார்பில் முன்னுரையும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது பற்றி பரிசீலித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் திமுகவினர் தொகுதியை பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகின்றனர். திமுக சார்பில் போட்டியிட தெற்கு மாவட்ட செயலாளர் திரு ஜெயபாலன் அவர்கள் முனைப்பு காட்டுவதாகவும் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது போன்று செய்திகள் வெளி வருகின்றன. 

கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் போட்டியிடும் போது அதற்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் திமுக ஆட்சியில் கனிம வள கொள்ளை பெருமளவில் நடந்துள்ளதாகவும் இது பற்றி தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு பழனி நாடார் அவர்களும் திமுகவின் மாவட்ட பொறுப்பில் இருக்கும் முக்கிய பிரபலங்களும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்து கனிமவள கொள்ளையை கட்டுப்படுத்தவில்லை என்பதில் மக்களுக்கு அதிர்ச்சி பெருமளவில் உள்ளது.

மேலும் ஆளுங்கட்சி கொடுத்த பலன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தென்காசியின் உள்கட்ட அமைப்பில் உள்ள குறைகளை சரி செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதன் காரணமாக அதிமுகவிற்கு அல்லது அதன் கூட்டணி கட்சிக்கு ஒரு கூடுதல் பலம் இருந்தாலும் இத்தொகுதியில் காங்கிரஸுக்கு பதிலாக திமுக களம் கண்டால் கடைசி நேர தேர்தல் யுக்திகளை பயன்படுத்தி திமுக வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது என்று பரவலாக கூறப்படுகிறது. 

இத்தொகுதியை பொருத்தவரையில் தமிழக வெற்றி கழகத்திற்கு 10 முதல் 15 சதவீதத்துக்கு உண்டான வாக்குகளை பெற முடியும் என நமது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 


Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்