நடிகர் பின்னால் ஓடும் அரசியல்வாதிகள்

 


தமிழக அரசியல் எப்போதுமே திரை பிரபலங்களை தூக்கி வைத்துக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. நமது தமிழக வாக்காளர்களின் மனநிலையை சினிமாவில் ஒரு நடிகர் நல்லது செய்வது போல் நடித்தால் அதை நம்பி ஏமாறும் சுபாவம் படைத்தவர்கள் தான்.

 தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தொடங்கியுள்ள கட்சியை நம்பி அதிமுகவில் உள்ள பல பெரிய அரசியல் அனுபவம் உள்ள  தலைவர்களும் மற்றும் சில தொண்டர்களும் தாவியுள்ளனர்.

 இது அதிமுக மட்டுமல்லாமல் மற்றுமுள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும் சிலர் தமிழக மக்கள் நடுநிலை கொண்டாடுவார்கள் என்ற சிந்தனையோடு கட்சி மாற வாய்ப்பு உள்ளது.

 ஆனால் அரசியலில் நடிகருக்குள்ள ஒரு ஈர்ப்பும் புகழும் மட்டுமே போதாது. ஒரு நல்ல தலைவருக்கு முக்கியமான அம்சங்கள் என்னவென்றால்

 தொலைநோக்குப் பார்வை 

 ஒரு அரசியல் தலைவர் இன்று வரும் பிரச்சினைகளை மட்டும் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது போன்ற பிரச்சினைகள் திரும்ப எழும்ப வண்ணம் முடிவுகளை எடுக்க வேண்டும்.

 முன்னேற்றத் திட்டங்கள் 

 இப்போது நமது பகுதியில் உள்ள பிரச்சனைகள் என்ன அவற்றை தீர்வு காண எந்த மாதிரி திட்டங்களை போட்டு எப்படி அவற்றை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற வகையில் சிந்திக்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.

 நிர்வாகம்

 ஒரு அரசின் வெற்றி என்பது அதன் தலைவர் கொண்டுள்ள அதிகாரங்களை எப்படி பயன்படுத்தி நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறார் என்பதில் தான் உள்ளது. அந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்ன என்பதையும் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு கட்டுப்பாடுடன் இருந்தது என்பதையும் வேலைவாய்ப்பு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு நிர்வாகத் திறனை முடிவு செய்ய வேண்டும்.

 வளர்ச்சி விகிதம்

 ஒரு நல்ல அரசு தனது ஆட்சி காலத்தில் இக்கட்ட அமைப்பு வசதிகளை எந்த அளவிற்கு மேம்படுத்தி உள்ளது? தொழில்துறையில் எந்த அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளன? புதிய தொழில்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் எந்த அளவிற்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது? அதற்கு இந்த அரசின் பங்கு என்ன? என்பதெல்லாம் பொறுத்து அளவிடப்படும்.

 இதுபோன்ற மற்ற பல காரணங்களையும் கொண்டு ஒரு நல்ல அரசு அல்லது ஒரு நல்ல அரசியல் கட்சியின் செயல் திட்டங்களை கொண்டு அளவிடலாம்.

 அரசியல் நிபுணர்களின் கருத்துக்களை பொருத்தவரை நடிகர் விஜய்க்கு தெளிவான அரசியல் திட்டங்களும் அல்லது கொள்கைகளோ இல்லை என்பதோடு அரசு அமைத்தால் தமது அரசு மூலம் என்ன மாதிரியான திட்டங்கள் கொடுத்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்ற எந்த ஒரு செயல்திட்டமும் அவளை அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. அவரும் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களைப் போன்று நிர்வாக திறமையில் அனுபவம் இல்லாதவராகவும் நிர்வாகத்தை சீராக செலுத்தும் அளவிற்கு திறமையாக இருப்பது போன்று தெரியவில்லை என்று கருதுகின்றனர்.

 அதுமட்டுமல்லாது அவர் திரைப்படத்தில் நடிக்கும் போது இலவசங்களை பற்றியும் விலை இல்லா பொருட்களின் திட்டங்கள் பற்றியும் தரக்குறைவாகவும் எதிர்த்து பேசிவிட்டு தற்போது அதற்கு நேர் மாறான வகையில் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் போன்ற ஏதோ தெளிவில்லாத உளறல் திட்டங்களை மக்கள் முன்வைத்து அவர்களின் ஆசையை தூண்டி வாக்குகளைப் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகவே தெரிகிறது.

 தமிழக மக்கள் சிந்தித்து தெளிவாக முடிவெடுக்காவிட்டால் அடுத்து ஒரு சுழல் சிக்கி சின்ன பின்னமாவது நிச்சயம்.

 அரசியல்வாதிகள் பலரும் தங்கள் இருப்பை தக்க பதவி ஆசையிலும் சுயநலத்தாலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படி யாராவது ஒருவர் பின்னால் ஓடிக் கொண்டிருப்பது மாறப்போவதில்லை.


Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?